பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைக்குட்டம் அணை நீர் வெளியேற்றம் தடுப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சிவகாசி- -மழையால் ஆனைக்குட்டம் அணைக்கு தண்ணீர் வந்த நிலையில் ஷட்டர் பழுதால் அனைத்து நீரும் வெளியேற,பொதுப்பணித்துறையால் தற்போத ஷட்டர் அடைக்கப்பட்டதால் நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.ஆனைக்குட்டம் அணை நீரானது பாசன வசதியை விட குடிநீர் ஆதாரமாக அதிகளவில் பயன்படுகிறது. விருதுநகரின் குடிநீர் ஆதாரமும் இந்த அணைதான். இது தவிர சுற்று கிராமங்களில் விவசாயம்,

சிவகாசி- -மழையால் ஆனைக்குட்டம் அணைக்கு தண்ணீர் வந்த நிலையில் ஷட்டர் பழுதால் அனைத்து நீரும் வெளியேற,பொதுப்பணித்துறையால் தற்போத ஷட்டர் அடைக்கப்பட்டதால் நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.ஆனைக்குட்டம் அணை நீரானது பாசன வசதியை விட குடிநீர் ஆதாரமாக அதிகளவில் பயன்படுகிறது. விருதுநகரின் குடிநீர் ஆதாரமும் இந்த அணைதான். இது தவிர சுற்று கிராமங்களில் விவசாயம், குடிநீர் தேவைக்கு போர்வெல் நீர் ஆதாரமாகவும் பயன்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையில் அணைக்கு தண்ணீர் வந்த நிலையில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வீணாகியது .இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை மூலம் ஷட்டர் வாயிலாக சென்ற நீர் அடைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது அணையில் 12 அடி நீர் உள்ளது.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அழகு சுந்தரம்: அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியதால் துாத்துக்குடியில் இருந்து முத்துக்குளிப்பு நபர்கள் 20 பேரை வரவழைத்து, பழுதான ஷட்டரில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . தற்போது தண்ணீர் வெளியேறுவதும் நின்றுவிட்டது. இனி மழையின் போது அதிக அளவு தண்ணீர் வந்தாலும் தண்ணீர் வெளியேறாது,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X