சென்னை-பிளவக்கால் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு ,கோவிலாறு அணைகளில் இருந்து பிளவக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீரை இன்று முதல் ஐந்து நாட்களுக்கும், பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்திற்கு வினாடிக்கு 3 கன அடி வீதம் இன்று முதல் பிப்., 28 வரை நீர் வரத்து, இருப்பு பொறுத்து கண்மாய் பாசனத்திற்கு பிப்., 28 வரை தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.ராஜபாளையம் சாஸ்தா கோவில் நீர்தேக்கத்தில் இருந்து இன்று முதல் எட்டு நாட்களுக்கு 50 கன அடி தண்ணீர் வீதம், நீர் இருப்பை பொறுத்து தேவைக்கேற்ப 48 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 3,131 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE