கார் புக்கிங் கேன்சல் மாணவிக்கு டிரைவர் திட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கார் புக்கிங் 'கேன்சல்' மாணவிக்கு டிரைவர் திட்டு

Added : நவ 20, 2021
Share
எலஹங்கா : வாடகை டாக்சியை, 'புக்' செய்த கல்லுாரி மாணவி, திடீரென 'கேன்சல்' செய்ததால் ஆத்திரம் அடைந்து திட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு எலஹங்காவில் உள்ள கல்லுாரியில் படிக்கும், 19 வயது மாணவி நவம்பர் 11ல் வீட்டுக்கு செல்வதற்காக வாடகை டாக்சியை புக் செய்தார். பின் சிறிது நேரம் கழித்து அதை கேன்சல் செய்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் மாணவிக்கு

எலஹங்கா : வாடகை டாக்சியை, 'புக்' செய்த கல்லுாரி மாணவி, திடீரென 'கேன்சல்' செய்ததால் ஆத்திரம் அடைந்து திட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு எலஹங்காவில் உள்ள கல்லுாரியில் படிக்கும், 19 வயது மாணவி நவம்பர் 11ல் வீட்டுக்கு செல்வதற்காக வாடகை டாக்சியை புக் செய்தார். பின் சிறிது நேரம் கழித்து அதை கேன்சல் செய்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் மாணவிக்கு போன் செய்து, 'ஏன் கேன்சல் செய்தீர்கள்' என கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்து, பாதிக்கப்பட்ட அந்த மாணவி, எலஹங்கா போலீசில் புகார் அளித்தார்.போலீசார் ஹென்னுாரை சேர்ந்த கார் டிரைவர் பூர்விக், 22 என்பவரை கைது செய்தனர்.அவரிடம் விசாரித்ததில், “ஏன் கேன்சல் செய்தீர்கள் என்று மட்டும் தான் கேட்டேன்; திட்டவில்லை,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X