போலீஸ் செய்திகள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
வேலை வாங்கி தருவதாக மோசடிசாத்துார்: ஆலங்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி 47. வங்கியில் கார் வாங்க கடன் கேட்டு மனு அளித்தபோது, இவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் ஜீவா உறவினரான சூர்யா, கடன் வாங்கி தருவதாகவும், கார் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 .10 லட்சம் கேட்டுள்ளார். சுப்பிரமணி தனது பெயரில் இருந்த 2 முக்கால் சென்ட் நிலத்தை சூர்யாவிற்கு எழுதி தந்தும், மனைவியின் 10

வேலை வாங்கி தருவதாக மோசடிசாத்துார்: ஆலங்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி 47. வங்கியில் கார் வாங்க கடன் கேட்டு மனு அளித்தபோது, இவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் ஜீவா உறவினரான சூர்யா, கடன் வாங்கி தருவதாகவும், கார் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 .10 லட்சம் கேட்டுள்ளார். சுப்பிரமணி தனது பெயரில் இருந்த 2 முக்கால் சென்ட் நிலத்தை சூர்யாவிற்கு எழுதி தந்தும், மனைவியின் 10 முக்கால் பவுன் நகை, ரூ 10 ஆயிரம் தந்துள்ளார். வேலை, கடன் வாங்கி தர வில்லை. சாத்துார் ஜே.எம்.2 நீதிமன்றம் உத்திரவுப்படி ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.மனநிலை பாதித்தவர் தற்கொலைராஜபாளையம்: செண்பகத்தோப்பு ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் கோபால் 50. மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவரது மகன் தேவா சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் துாக்கில் தொங்கியப்படி தற்கொலைசெய்துகொண்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.தாய், மகன் மீது வழக்குசிவகாசி: பெரிய பொட்டல் பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் அனிதா 29. சாக்கடை அடைப்பு சம்பந்தமாக இவருக்கும் அருகில் வசிக்கும் கிருஷ்ணவேணிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அனிதாவை , கிருஷ்ணவேணி, அவரது மகன் ஜோதி ரூபன் தாக்கினர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X