சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருத்தணி கோவில் உதவியாளர் திருவேற்காடுக்கு அதிரடி மாற்றம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருத்தணி : இடைத்தரகர்களுடன் கூட்டு வைத்து கோவிலுக்கு இழப்பீடு செய்யும் வகையில் நடந்து கொண்ட, திருத்தணி முருகன் கோவில் உதவியாளர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டார்.தமிழகத்தில், ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் திருக்கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள், கடந்த மாதம், 25ம் தேதி வரை, அந்தந்த கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் மட்டும்

திருத்தணி : இடைத்தரகர்களுடன் கூட்டு வைத்து கோவிலுக்கு இழப்பீடு செய்யும் வகையில் நடந்து கொண்ட, திருத்தணி முருகன் கோவில் உதவியாளர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டார்.

தமிழகத்தில், ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் திருக்கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள், கடந்த மாதம், 25ம் தேதி வரை, அந்தந்த கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மூலம், கோவில் ஊழியர்களை பிற கோவில்களுக்கு பணியிட மாற்றம் செய்யலாம் என, அரசு புதிய அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து கோவில் வரலாற்றில் முதல் முறையாக, திருத்தணி முருகன் கோவிலில் பணிபுரிந்த உதவியாளர் வேலு என்பவரை, ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.மேலும், உதவியாளர் வேலுவை, உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும், கோவில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலு பொறுப்பு வகித்தபோது, இடைத்தரகர்களுடன் கூட்டு வைத்து, கோவிலுக்கு இழப்பீடு செய்யும் வகையில் நடந்து கொண்டார் என, அறநிலையத் துறை ஆணையருக்கு புகார் சென்றது.விசாரணையில் உண்மையென தெரிந்ததும், ஆணையர் குமரகுருபரன், உதவியாளர் வேலுவை இடமாற்றம் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X