சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயிர் அடங்கல் தர மறுக்கும் வி.ஏ.,ஓ.,க்கள்;விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
விருதுநகர்- -எரிச்சநத்தம், செவலுார், நென்மேனி உள்ளிட்ட பகுதி வி.ஏ.ஓ.,க்கள் பயிர் அடங்கல் வழங்க மறுப்பதாக,விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார், வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், கலெக்டர் நேர்முக உதவியாளர்

விருதுநகர்- -எரிச்சநத்தம், செவலுார், நென்மேனி உள்ளிட்ட பகுதி வி.ஏ.ஓ.,க்கள் பயிர் அடங்கல் வழங்க மறுப்பதாக,விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார், வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் செந்தில் குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி, கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் ரவிச்சந்திரன், தோட்டகலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை செயற்பொறியாளர் சங்கர் ராஜ், வேளாண்மை துணை இயக்குநர் (வனிகம்,விற்பனை) சரஸ்வதி, விருதுநகர் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன் பங்கேற்றனர்விவசாயிகள் விவாதம்:ராமச்சந்திரராஜா (ராஜபாளையம்): யூரியா உரத்தட்டுபாடு நிலவுகிறது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.கலெக்டர்: உரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சனிக்கிழமை ஆயிரம் டன் வருகிறது. இனி வரும் காலங்களில் உரத்தட்டுபாடு இருக்காது.விஜயமுருகன்( விருதுநகர்): காட்டுபன்றிகளை பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும். இதனால் விவசாய பயிர்கள் சேதமாகிறது.கலெக்டர்: அரசிற்கு தெரிவிக்கப்படும்.இருளப்ப ன்(கூமாபட்டி): பிளவக்கல் அணை நீரை விவசாய பாசனத்திற்காக திறந்துவிட வேண்டும்.கலெக்டர்: அரசின் உத்தரவு பெறப்பட்டுள்ளது. நாளை (நவ.21)திறந்துவிடப்படும்.முத்தையா(மம்சாபுரம்): பொதுப்பணிதுறை கண்மாய்கள் குத்தகை காலத்தை மூன்று ஆண்டாக உயர்த்தியுள்ளனர். இதனால் கண்மாய் பாசன விவசாயிகள் பாதிக்கின்றனர்.கலெக்டர்: அறிவிப்பு தான் வந்துள்ளது. அதற்கான பணிகள் துவங்கவில்லை.நாராயணசாமி(சிவகாசி): எரிச்சநத்தம், செவலுார், தொம்பகுளம், மாயூர்நாதபுரம், பனைஎரிபட்டி, என்.கலிங்கப்பட்டி, நென்மேனி பகுதி வி.ஏ.ஓ.,க்கள் பயிர் அடங்கல் வழங்க மறுக்கின்றனர்.கலெக்டர்: கோட்டாட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்புராஜ் (கவலுார்): தொம்பகுளம், குமாரலிங்கபுரம் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் தர மறுக்கின்றனர்.கலெக்டர்: முந்தைய பயிர் கடன் தவணை முடித்த விவசாயிகள் அனைவருக்கும் கடன் வழங்கப்படும்.பாண்டுரங்கன்( விருதுநகர்): ஆனைக்குட்டம் அணையில் பழுதடைந்த ஷட்டரை சரிசெய்ய வேண்டும்.கலெக்டர்: அதற்கான பணிகள் நடந்து வருகிறது.செயற்பொறியாளர் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.அழகர்சாமி( திருத்தங்கல்): சிவகாசியில் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் பணி செய்ய முடியாது என சர்வேயர்கள் மறுக்கின்றனர்.கலெக்டர்: விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X