ஊரணியில் கழிவுநீர் கலப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சாயல்குடி--சாயல்குடி பேரூராட்சி சதுரயுகவல்லி நகர் அருகே ஆழாட்டு ஊரணியில்தெருக்களிலும், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து வருவதால் ஊரணியின் நிறம் பச்சையாக காணப்படுகிறது.அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது; ஆழாட்டு ஊரணி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குளிப்பதற்கும்,அன்றாட நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் பயன்பட்டு

சாயல்குடி--சாயல்குடி பேரூராட்சி சதுரயுகவல்லி நகர் அருகே ஆழாட்டு ஊரணியில்தெருக்களிலும், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து வருவதால் ஊரணியின் நிறம் பச்சையாக காணப்படுகிறது.அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது; ஆழாட்டு ஊரணி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குளிப்பதற்கும்,அன்றாட நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் பயன்பட்டு வந்தது. கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ஊரணியின் கரைப் பகுதியில் பக்கவாட்டு சுவர் எழுப்பப்பட்டது.தரமற்ற கட்டுமானத்தால்,முறையான சிமென்ட் பூச்சு இல்லாததால் அப்பகுதி முழுவதும் ஜல்லி கற்கள் நீட்டிக்கொண்டு வெளியே தெரிகிறது.கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பக்கவாட்டு சுவர் பகுதி இடிந்து இடிபாடுகளுடன் விபத்து அபாயம் நிலவுகிறது. பலமுறை சாயல்குடி பேரூராட்சியில் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஊரணி சீரமைத்தால் நிலத்தடிநீரை பாதுகாக்கலாம். குறைகளை நிவர்த்தி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X