தொடரும் மர்ம காய்ச்சலால் மூன்று கிராம மக்கள் பாதிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
ரெகுநாதபுரம்-----ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சிக்குட்பட்ட புதுார், நேருபுரம், சிலம்பி நாடு உள்ளிட்ட மூன்று கிராமங்களில் வீடுகள் தோறும் மர்ம காய்ச்சலால் பலர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.புதுார் பொருட்செல்வி 31 கூறியதாவது: எனக்கும், எனது இரண்டு மகன்களுக்கும் காய்ச்சல் பாதிப்பால் அவதிக்குள்ளாகிறோம்.வீட்டிற்கு இரண்டு முதல் மூன்று பேர் வரை 50க்கும்

ரெகுநாதபுரம்-----ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சிக்குட்பட்ட புதுார், நேருபுரம், சிலம்பி நாடு உள்ளிட்ட மூன்று கிராமங்களில் வீடுகள் தோறும் மர்ம காய்ச்சலால் பலர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.புதுார் பொருட்செல்வி 31 கூறியதாவது: எனக்கும், எனது இரண்டு மகன்களுக்கும் காய்ச்சல் பாதிப்பால் அவதிக்குள்ளாகிறோம்.வீட்டிற்கு இரண்டு முதல் மூன்று பேர் வரை 50க்கும் மேற்பட்டோர் மூன்று கிராமங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ குழுவினர் எங்கள் கிராமத்திற்கு வரவில்லை. எங்கள் கிராமப் பகுதிக்கு துணை சுகாதார நிலையம் வேண்டும். நாங்கள் மருத்துவ சிகிச்சைக்காக ரெகுநாதபுரம், திருப்புல்லாணி மற்றும்20 கி.மீ.,தொலைவில் உள்ள ராமநாதபுரம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.மாவட்ட நிர்வாகம் மூன்று கிராமங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X