அக்கடா... துக்கடா... கர்நாடகா ! சுந்தரம் கால்வாய் சீரமைப்பு பணியில் தெலுங்கானா தொழிலாளர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அக்கடா... துக்கடா... கர்நாடகா ! சுந்தரம் கால்வாய் சீரமைப்பு பணியில் தெலுங்கானா தொழிலாளர்கள்

Added : நவ 20, 2021
Share
கொப்பால்:கொப்பால் கங்காவதி அருகே உள்ள தேவகாட் பகுதியில் விஜயநகர் துணை கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு 2019ல் மாநில அரசு 4 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. ஆனால் விவசாய பணிகள், மழை, ஊரடங்கு காரணமாக சீரமைப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.தற்போது இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு வேலை


கொப்பால்:கொப்பால் கங்காவதி அருகே உள்ள தேவகாட் பகுதியில் விஜயநகர் துணை கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு 2019ல் மாநில அரசு 4 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது.

ஆனால் விவசாய பணிகள், மழை, ஊரடங்கு காரணமாக சீரமைப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.தற்போது இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வந்த இவர்களுக்கு அதிகாரிகள் இதுவரை மருத்துவ பரிசோதனை செய்யவில்லை.தற்போது, கொரோனா பீதி குறைந்திருந்தாலும்,

இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் தடுப்பூசி போட வில்லை என கூறப்படுகிறது. இவர்களால் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.*அரண்மனையில் மேற்கூரை சேதம்மைசூரு:மைசூரு பல்கலையின் மானச கங்கோத்திரி வளாகத்தில் ஜெயலட்சுமி விலாஸ் அரண்மனை உள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய நாட்டுப்புற கலைகளின் அருங்காட்சியமாகவும் உள்ளது.இந்த அரண்மனை முறையான பராமரிப்பு இல்லாததால் தெற்கு பகுதியில், முதல் மாடி எட்டு முதல் 10 அடி அகலம் வரை பெயர்ந்து விழுந்துள்ளது.மழை பெய்து சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் இடியும் இதை சுற்றியுள்ள மற்ற பகுதிகளும் இடியும் நிலையில் உள்ளது. அரண்மனையை புதுப்பிக்க 20 கோடி ரூபாய் வரை தேவை என்பதால் சீரமைப்பு பணிகள் தாமதமாகுவதாக மைசூரு பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.*கன்னடம்மா ரதம் தொடக்கம்ராய்ச்சூர்:கர்நாடக மாநில திறந்த வெளி பல்கலை சேர்க்கை ஆரம்பமாகி உள்ளது. இதில் அதிக அளவில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராய்ச்சூரில் கன்னடம்மா கல்வி ரதயாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.

இதை கர்நாடக திறந்த வெளி பல்கலை கலபுரகி வட்டார இயக்குனர் சங்கமேஷ் தொடங்கி வைத்தார். இந்த ரதம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளது.*அடை மழையால் ஆபத்துதிராட்சை விளைச்சல் பாதிப்புவிஜயபுரா:விஜயபுரா மாவட்டம் திராட்சைகளின் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இங்கு 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு திராட்சை பயிரிடப்பட்டுள்ளது.இதில் பெரும்பாலான தோட்டங்களில் திராட்சை அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் மேகம் சூழ்ந்த வானிலை மற்றும் அடை மழையால் திராட்சை பயிர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது.இதனால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தோட்டத்துக்கு வந்து பரிசீலனை வேண்டும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பாகல்கோட் தோட்டக்கலைத்துறை பல்கலை நிபுணர்கள் ஆய்வுக்காக இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் செல்ல உள்ளனர்.கால்வாய் சீரமைப்பு பணியில்தெலுங்கானா தொழிலாளர்கள்கொப்பால்: கொப்பால் கங்காவதி அருகே உள்ள தேவகாட் பகுதியில் விஜயநகர் துணை கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு 2019ல் மாநில அரசு 4 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. ஆனால் விவசாய பணிகள், மழை, ஊரடங்கு காரணமாக சீரமைப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.தற்போது இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வந்த இவர்களுக்கு அதிகாரிகள் இதுவரை மருத்துவ பரிசோதனை செய்யவில்லை.தற்போது, கொரோனா பீதி குறைந்திருந்தாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் தடுப்பூசி போட வில்லை என கூறப்படுகிறது. இவர்களால் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.**கன்னடம்மா ரதம் தொடக்கம்ராய்ச்சூர்: கர்நாடக மாநில திறந்த வெளி பல்கலை சேர்க்கை ஆரம்பமாகி உள்ளது.

இதில் அதிக அளவில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராய்ச்சூரில் கன்னடம்மா கல்வி ரதயாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.இதை கர்நாடக திறந்த வெளி பல்கலை கலபுரகி வட்டார இயக்குனர் சங்கமேஷ் தொடங்கி வைத்தார். இந்த ரதம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளது.*அடை மழையால் ஆபத்துதிராட்சை விளைச்சல் பாதிப்புவிஜயபுரா: விஜயபுரா மாவட்டம் திராட்சைகளின் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.

இங்கு 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு திராட்சை பயிரிடப்பட்டுள்ளது.இதில் பெரும்பாலான தோட்டங்களில் திராட்சை அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் மேகம் சூழ்ந்த வானிலை மற்றும் அடை மழையால் திராட்சை பயிர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது.இதனால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தோட்டத்துக்கு வந்து பரிசீலனை வேண்டும் என தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி பாகல்கோட் தோட்டக்கலைத்துறை பல்கலை நிபுணர்கள் ஆய்வுக்காக இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் செல்ல உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X