பொது செய்தி

இந்தியா

அக்கடா... துக்கடா... கர்நாடகா ! - 3

Added : நவ 20, 2021
Share
Advertisement
சுந்தரம் காய வைத்திருந்த மிளகாய் சேதம்பல்லாரி:பல்லாரி குருகோடு அருகே உள்ள ஏழுபென்ச்சு கிராமத்தில் உள்ள பாண்டுரங்கா கோவில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த மிளகாய்களை காய வைத்திருந்தனர்.நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் இந்த மிளகாய்களில் பெரும் பகுதி அடித்து செல்லப்பட்டது. மீதம் உள்ளவை நீரில் நனைந்து சேதம் அடைந்து

சுந்தரம் காய வைத்திருந்த மிளகாய் சேதம்பல்லாரி:பல்லாரி குருகோடு அருகே உள்ள ஏழுபென்ச்சு கிராமத்தில் உள்ள பாண்டுரங்கா கோவில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த மிளகாய்களை காய வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் இந்த மிளகாய்களில் பெரும் பகுதி அடித்து செல்லப்பட்டது. மீதம் உள்ளவை நீரில் நனைந்து சேதம் அடைந்து விட்டன.வயல்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.*நடமாடும் சோலார் கேன்டீன்உத்தர கன்னடா:உத்தர கன்னடா சிரசியில் சோலா மின் உற்பத்தியுடன் கூடிய நடமாடும் கேண்டீன் தொடங்கப்பட்டுள்ளது.

சரக்கு ஆட்டோ கேன்டீன் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் 800 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.இதன் மூலம் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, கேண்டீன் மற்றும் வாகனத்துக்கு பயன்படுத்தப்படும். அதோடு வாகனத்தில் சூரிய ஒளியில் இயங்கும் குளிர்சாதன பெட்டியும் உள்ளது.இதனை 'செல்கோ' நிறுவனம் 1.50 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைத்து கொடுத்துள்ளது.

இந்த சோலார் நடமாடும் வாகனம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.*கேரள கழிவுடன் வந்த வாகனம் சிறைபிடிப்புசாம்ராஜ்நகர்:சாம்ராஜ்நகர் குண்டல்பேட் அருகே உள்ள பத்திகேரி சாலையில் சரக்கு ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட கழிவுகளை கேரள கழிவுளை கொட்ட முயற்சித்தது.இதை பார்த்த அப்பகுதியினர் டிரைவரை பிடித்து இங்கு எதற்காக கழிவுகளை கொட்ட வந்தீர்கள் என கேட்டு கண்டனம் தெரிவித்தனர்.

பின் கழிவுகளை கேரளாவுக்கே திருப்பி அனுப்பினர். குண்டல்பேட் சோதனை சாவடியில் சரியான சோதனை செய்யாததால் கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.இது குறித்து தகவல் தெரிந்தும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.*கண்காணிப்பு கேமராக்கள்செயல்படாத நிலைமைகலபுரகி:கலபுரகி சிஞ்சோளியில் 5 லட்சம் ரூபாய் செலவில் 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

2020 ஆகஸ்ட் 18ல் இந்த கண்காணிப்பு கேமராக்கள் தொடங்கி வைக்கப்பட்டன.இதை பராமரிக்கும் பொறுப்பு போலீசாருக்கு வழங்கப்படாமல் தனியார் குத்தகைதாரருக்கு வழங்கப்பட்டது. அவர்கள் சரியாக பராமரிக்காததால் அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் தற்போது செயல்படாமல் உள்ளது.குற்றச்செயல்களை தடுப்பதற்காக இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ஆனால் தற்போது உபயோகமற்றதாக மாறி விட்டது. சம்பந்தப்பட்ட குத்ததைதாருக்கு கண்காணிப்பு கேமராவை சரியான முறையில் பராமரிக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேரள கழிவுடன் வந்த வாகனம் சிறைபிடிப்புசாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் குண்டல்பேட் அருகே உள்ள பத்திகேரி சாலையில் சரக்கு ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட கழிவுகளை கேரள கழிவுளை கொட்ட முயற்சித்தது.இதை பார்த்த அப்பகுதியினர் டிரைவரை பிடித்து இங்கு எதற்காக கழிவுகளை கொட்ட வந்தீர்கள் என கேட்டு கண்டனம் தெரிவித்தனர்.பின் கழிவுகளை கேரளாவுக்கே திருப்பி அனுப்பினர். குண்டல்பேட் சோதனை சாவடியில் சரியான சோதனை செய்யாததால் கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.இது குறித்து தகவல் தெரிந்தும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X