அக்கடா துக்கடா...4| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அக்கடா துக்கடா...4

Added : நவ 20, 2021
Share
தபால் அலுவலகம் இடமாற்றம்ஹாசன்:ஹாசன் அரசிகரே ரயில் நிலையம் அருகில் உள்ள தபால் அலுவலகத்தின் குடோன் ஹுப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் அந்த கட்டடத்தில் இயங்கி வந்த தபால் அலுவலகமும் தற்போது பீரூருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டடம் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது.அரசிகரேயில் தபால் அலுவலகம் இருந்த போது தபால், பார்சல்கள் மைசூரு, ஹாசன்,

தபால் அலுவலகம் இடமாற்றம்

ஹாசன்:ஹாசன் அரசிகரே ரயில் நிலையம் அருகில் உள்ள தபால் அலுவலகத்தின் குடோன் ஹுப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் அந்த கட்டடத்தில் இயங்கி வந்த தபால் அலுவலகமும் தற்போது பீரூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் இந்த கட்டடம் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது.அரசிகரேயில் தபால் அலுவலகம் இருந்த போது தபால், பார்சல்கள் மைசூரு, ஹாசன், ஷிவமொகா, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க வசதியாக இருந்தது.

பீரூரு ஜங்ஷனாக இருந்தாலும் அனைத்து ரயில்களும் அரசிகரே வழிகத்தான் செல்ல வேண்டும். தற்போது தபால்கள், பார்சல்கள் சரியான நேரத்துக்கு செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தபால் அலுவலகத்தை மீண்டும் அரசிகரேக்கு மாற்ற வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இதனால் மாதம் 75 ஆயிரம் ரூபாய் வாடகை மீதமாவதோடு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கட்டடமும் பாதுகாக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

*தொடர் மழையால் குடகில் கடும் பாதிப்புகுடகு:குடகு மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆறு முதல் எட்டு மாதம் வரை மழை பெய்யும். மீதமுள்ள நான்கு மாதங்களில் நிலவும் வறண்ட வானிலை காபி, மிளகு பயிர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஆரம்பித்த மழை இன்னும் நிற்கவில்லை.

தொடர்ந்து 11 மாதமாக மழை பெய்வதால் காபி, மிளகு பயிர்கள் அழுக ஆரம்பித்து விட்டன. காபி செடிகளில் பூத்த பூக்களும் செடிகளில் அழுகி உதிர ஆரம்பித்து விட்டன. நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தாலும் மழையால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மழையால் குடகுக்கு சுற்றுலா பயணியர் வருகை இல்லாமல் வருவாய் சரிந்து விட்டது.

இதனால் இந்த ஆண்டு மழையால் ஒரு பக்கம் விவசாயத்துக்கு பாதிப்பு என விவசாயிகளும், சுற்றுலாத்துறைக்கு நஷ்டம் என அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.*வயலுக்குள் புகுந்த யானை கூட்டம்ராம்நகர்: ராம்நகர் அருகே உள்ள தேவரதொட்டி கிராமத்தில் 15 நாட்களாக ஐந்து யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. அங்குள்ள சோளம், ராகி தக்காளி, மா, நெல், பலாப்பழ தோட்டத்துக்குள் புகுந்து மிதித்து நாசப்படுத்தி வருகின்றன.

தென்னை மரங்களை வேறோடு பிடுங்கி எறிந்துள்ளது. ஏற்கனவே தொடர் மழையால் பயிர் சேதத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். மழையில் தப்பிய பயிர்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.ராம் நகர்: ராம் நகர் அருகே உள்ள தேவரதொட்டி கிராமத்தில் 15 நாட்களாக ஐந்து யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. அங்குள்ள சோளம்,

ராகி தக்காளி, மா, நெல், பலாப்பழ தோட்டத்துக்குள் புகுந்து மிதித்து நாசப்படுத்தி வருகின்றன.தென்னை மரங்களை வேறோடு பிடுங்கி எறிந்துள்ளது. ஏற்கனவே தொடர் மழையால் பயிர் சேதத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். மழையில் தப்பிய பயிர்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X