பொது செய்தி

இந்தியா

பி.யு.சி., பருவத் தேர்வு தேதி மாற்றியமைத்து அட்டவணை

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : இரண்டாமாண்டு பி.யூ.சி., பருவத் தேர்வுகளுக்கான தேதிகளை மாற்றி, கல்வித்துறை அட்டவணை வெளியிட்டுள்ளது.பி.யூ.சி., இரண்டாமாண்டு தேர்வு நடத்த பெற்றோர் மற்றும் கல்லுாரி நிர்வாகங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததோடு, நவ., மாதம் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால், கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.கூட்டத்தின் இறுதி முடிவாக, நவம்பர் மாதம் நடக்க இருந்த

பெங்களூரு : இரண்டாமாண்டு பி.யூ.சி., பருவத் தேர்வுகளுக்கான தேதிகளை மாற்றி, கல்வித்துறை அட்டவணை வெளியிட்டுள்ளது.பி.யூ.சி., இரண்டாமாண்டு தேர்வு நடத்த பெற்றோர் மற்றும் கல்லுாரி நிர்வாகங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததோடு, நவ., மாதம் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால்,

கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.கூட்டத்தின் இறுதி முடிவாக, நவம்பர் மாதம் நடக்க இருந்த தேர்வுகள், டிச.,9 முதல் 23 வரை நடத்துவதற்கான அட்டவணையை கல்விதுறை வெளியிட்டுள்ளது.தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுத்துறை துணை இயக்குனர்களிடம் வழங்கப்படுகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை அச்சடிப்பது குறித்து, துணை இயக்குனர்கள் கண்காணிக்கின்றனர். மேலும், தேர்வு விடைத்தாள்கள் கல்லுாரி அளவில் திருத்தப்படுகிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:கல்லுாரி அளவில் தான் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் கல்லுாரி திறக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.பி.யூ.சி., முதலாமாண்டு தேர்வுக்கான வினாத்தாள்களை அந்தந்த கல்லுாரிகள் பொறுப்பேற்று வடிவமைக்க வேண்டும். தேர்வுகளை கல்லுாரி நிர்வாகங்கள் நடத்தி, மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவிட வேண்டும்.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X