பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரத்தில் மற்றுமொரு அரசு கலைக் கல்லூரி; உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம்-- -ஒட்டன்சத்திரத்தில் மேலும் ஒர அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தேர்தல் வாக்குறுதியில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2 அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். அவரது முயற்சியால் சட்டசபையில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஹிந்து அறநிலையத்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் தலா

ஒட்டன்சத்திரம்-- -ஒட்டன்சத்திரத்தில் மேலும் ஒர அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தேர்தல் வாக்குறுதியில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2 அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். அவரது முயற்சியால் சட்டசபையில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஹிந்து அறநிலையத்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் தலா ஒரு கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சின்னையகவுண்டன் வலசில் சிலநாட்களுக்கு முன் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் மகளிர் கலைக் கல்லூரி இந்த ஆண்டே துவங்கி செயல்பட்டு வருகிறது.தற்போது 2வது கல்லுாரியாக உயர் கல்வித்துறை சார்பில் கலை, அறிவியல் கல்லூரி தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இக் கல்லூரியில் 2022 -- 23 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். இக்கல்லூரியில் இருபாலரும் படிக்கலாம். தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்க அனுமதியும், 17 உதவி பேராசிரியர்கள் (முதலாம் ஆண்டுக்கு) மற்றும் 17 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.இதனை தி.மு.க.,வினர் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X