பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் நாளை மெகா தடுப்பூசி முகாம் 1010 இடங்களில் நடக்கிறது

Added : நவ 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல்லில் நாளை (நவ.21) ஆயிரத்து 10 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.தொற்று பரவலை தடுக்க நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்து வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் தொற்று பரவல் 10 க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனையடுத்து நாளை (நவ.21) ஆயிரத்து 10 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.

திண்டுக்கல்-திண்டுக்கல்லில் நாளை (நவ.21) ஆயிரத்து 10 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.தொற்று பரவலை தடுக்க நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்து வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் தொற்று பரவல் 10 க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனையடுத்து நாளை (நவ.21) ஆயிரத்து 10 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. இன்னும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.சுகாதார மாவட்டம் திண்டுக்கல்லில் முதல் டோஸ் 7 லட்சத்து 32 ஆயிரத்து 337 பேர், இரண்டாவது டோஸ் 3 லட்சத்து 45 ஆயிரத்து 992 பேர் என மொத்தம் 10 லட்சத்து 78 ஆயிரத்து 329 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பழநியில் முதல் டோஸ் 5 லட்சத்து 66 ஆயிரத்து 741 பேர், இரண்டாவது டோஸ் 2 லட்சத்து 80 ஆயிரத்து 106 பேர் என மொத்தம் 8 லட்சத்து 46 ஆயிரத்து 847 பேருக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 19 லட்சத்து 25 ஆயிரத்து 176 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X