குற்றச்செயல்களை தடுக்க போலீசார் ஒத்துழைப்பு தேவை: அமித் ஷா வலியுறுத்தல்

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லக்னோ : ''மாநில மற்றும் மத்திய அமைப்புகளை சேர்ந்த போலீசாருக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டை துவக்கி வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: கொரோனா தொற்று காலத்தில் மாநில போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ போலீஸ் படையை
Amit Shah, BJP, Police

லக்னோ : ''மாநில மற்றும் மத்திய அமைப்புகளை சேர்ந்த போலீசாருக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டை துவக்கி வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: கொரோனா தொற்று காலத்தில் மாநில போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ போலீஸ் படையை சேர்ந்த போலீசார் சிறப்பாக பணியாற்றினர். தங்களை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு சேவை செய்தனர் .


latest tamil news



மத்திய அமைப்புகளை சேர்ந்த போலீசாருக்கும், மாநில போலீசாருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு தேவை. அப்போது தான் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளிலும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும். பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
20-நவ-202118:27:08 IST Report Abuse
DVRR "மாநில மற்றும் மத்திய அமைப்புகளை சேர்ந்த போலீசாருக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை" அதெல்லாம் நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம் போலீஸ் நாங்க சொல்றதை மட்டும் தான் கேட்கணும் எங்க கட்சி ஆளுங்களுக்கு தான் டப்பா அடித்து அடிமையாக நாங்க சொல்றதை கேட்டு கமிஷனில் பங்கு கொடுத்து இப்படி இருக்கணும் - இப்படிக்கு மோதி எதிர்ப்பு சங்கங்கள் சங்கங்கள் சங்கங்கள் மடியல் அரசு முதல் ஒர்ஸ்ட் பெங்கால் அரசு வரை
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-நவ-202116:42:37 IST Report Abuse
Lion Drsekar இதைத்தான் பொதுமக்களும் எதிர்பாக்கின்றனர், அப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருந்தால் இன்றைக்கு ஒரு சிறைச்சாலைகளும் இருந்திருக்காது எங்குமே எந்த ஒரு தவறும் நடக்காது, இன்றைக்குத்தான் தவறான செயல்களும் ஒரு முழுநேர தொழிலாக அங்கீகரிக்கப்பட்ட பின்பு யார்தான் என்ன செய்ய முடியும், நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் கேட்க்கிறோம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
20-நவ-202116:39:30 IST Report Abuse
சம்பத் குமார் 1). மக்கள் தொகை பெருகக்ம் ஒருபக்கம்.2). கயவர்கள், சமூகத்தை சீர் அழிக்க துடிக்கும் போராளிகள் நக்சலைட்கள் தீவீரவாதிகள் என பல் முனைத் தாக்குதலுக்கு போலீஸ் நிர்வாகம் உள்ளது.3). இவை எல்லாவற்றுக்கும் மேல் அரசியல்வாதிகள் ஒருபுறம்.4). மேல் அதிகாரிகளின் ஒருபுறம்5). சொந்த பிரச்சினைகள் ஒருபுறம்.6)..இவை எல்லாவற்றுக்கும் மேலாக குறைவான சம்பளம்7). போலீஸ் துறை சுறுசுறுப்பாக நல்ல முறையில் நடைபெற முதலில் போலீஸ்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.8). நவீன வசதிகளை அதாவது Digital முறையில் கண்டுபிடித்தல் ஆகியவற்றை நடைமுறை படுத்த வேண்டும்.9). வாரம் தவறாமல் ந்ல்ல பயிற்சி மற்றும் motivation பயிற்சி அளிக்க வேண்டும். 10). போலீஸ் நண்பர்கள் இப்பொழுது உள்ள சூழ்நிலையை புரிந்து துரிதமாக நியாமான முறையில் வழக்குகளை அணுக வேண்டும்.நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X