தமிழ்நாடு

இடமில்லை: மாவட்ட நூலகங்களில் புதிதாக வரும் நூல்களுக்கு இடமில்லை

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மாவட்ட மைய, கிளை, கிராமம் என மொத்தம் 133 நுாலகங்கள் உள்ளன. அரசு ஒவ்வொரு நுாலகங்களுக்கும் ஆண்டுக்கு புதிதாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுால்கள் வழங்குகிறது. பெரும்பாலான வாடகை, இலவச கட்டடங்களில் உள்ள நுாலகங்களில் இடப்பற்றாக்குறையால் டேபிள்களில் நுால்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.பல நுாலகங்களின் கட்டட சுவர்களில் விரிசல், உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் உள்ளே இறங்கி
 இடமில்லை: மாவட்ட நூலகங்களில் புதிதாக வரும் நூல்களுக்கு இடமில்லை

மாவட்ட மைய, கிளை, கிராமம் என மொத்தம் 133 நுாலகங்கள் உள்ளன. அரசு ஒவ்வொரு நுாலகங்களுக்கும் ஆண்டுக்கு புதிதாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுால்கள் வழங்குகிறது. பெரும்பாலான வாடகை, இலவச கட்டடங்களில் உள்ள நுாலகங்களில் இடப்பற்றாக்குறையால் டேபிள்களில் நுால்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

பல நுாலகங்களின் கட்டட சுவர்களில் விரிசல், உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் உள்ளே இறங்கி நுால்களை சேதமாக்கி விடுகிறது. சில நுாலகங்களில் கழிவறை, குடிநீர் வசதிகூட இல்லை என்பது வேதனை.மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் அரசு நுாலகம் கட்டவுள்ள சூழலில் ஏற்கனவே செயல்படும் நுாலகங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பதில் நியாயமில்லை.

எனவே விரிசல் விழுந்த கட்டடங்களில் செயல்படும் நுாலகங்களை இடவசதி உள்ளகட்டடங்களுக்கு மாற்ற வேண்டும். உள்ளாட்சி துறை தரவேண்டிய நுாலக வரி கோடி கணக்கில் நிலுவையில் உள்ளதால் நுாலக கட்டடங்களை சீரமைக்க, பராமரிக்க முடியாமல் நுாலக துறை தவிக்கிறது என வாசகர்கள் தெரிவித்தனர்
தமிழகத்தில் 54வது தேசிய நுாலக வார விழா (நவ., 14 -- 20) கொண்டாடப்படும் நிலையில் மதுரையில் கிளை, கிராம இலவச கட்டட நுாலகங்களில் நுால்கள் வைக்க இடமில்லை. சில நுாலக கட்டடங்களும் விரிசல் விழுந்து பயன்படுத்த தகுதியற்றதாக மாறிவிட்டன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-நவ-202116:36:15 IST Report Abuse
Lion Drsekar மன்னிக்கவும் தற்போது கணினி மற்றும் கூகுள் வந்த பிறகு எதற்கு மற்றவைகள் என்ற அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி, சிந்தித்துப்பார்த்தால் உண்மை வெளிவரும் வந்தே மாதரம்
Rate this:
Cancel
20-நவ-202115:23:34 IST Report Abuse
மதுமிதா நூல்களுக்கு இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை
Rate this:
Cancel
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
20-நவ-202114:58:17 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan இப்பொழுது என்றில்லை. இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த நிலைதான். நூலகத்தில் உள்ள பழைய நூல்களை எல்லாம் கடைக்குப்போட்டுத்தான் புதுநூல்களுக்கு இடம் பிடித்தார்கள். பின்னர் புது அடுக்குகளும் வாங்கப்பட்டன. இருப்பினும் போதிய நூலடுக்கு இல்லாமல் மீண்டும் கடைக்குப் போயின. அருமையான நூல்களும் விழா மலர்களும் வீணாயின. இதுபோன்ற நிலை இனி வராமல் அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புதிய கட்டடங்க ளும் கட்டித்தரப்பட வேண்டும். அன்புடன்-இலக்குவனார்_திருவள்ளுவன், தமிழே_விழிதமிழா_ விழி எழுத்தைக்_காப்போம் மொழியைக்காப்போம் இனத்தைக்காப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X