பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலைமேல்திருக்கார்த்திகை 'மஹா தீபம்'

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் மலைமேல் நேற்று(நவ.,19) திருக்கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். இன்று தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.காலையில் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிம்மாசனத்தில் புறப்பாடாகி கோயில் திருவாட்சி மண்டபத்தை வலம் சென்றனர். கோயிலுக்குள் அனுக்ஞை விநாயகர் முன்பு மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள்,

திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் மலைமேல் நேற்று(நவ.,19) திருக்கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். இன்று தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.காலையில் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிம்மாசனத்தில் புறப்பாடாகி கோயில் திருவாட்சி மண்டபத்தை வலம் சென்றனர். கோயிலுக்குள் அனுக்ஞை விநாயகர் முன்பு மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதே நேரத்தில் மலைமேல் தீப மண்டபம் அருகிலுள்ள உச்சிப்பிள்ளையார் முன்பு கும்பங்களில் புனிதநீர் நிரப்பி விநாயகர் பூஜை, அக்னிலிங்க பூஜை, வர்ணபூஜைகள், தீபாராதனை முடிந்து, தீப கொப்பரையில் புனிதநீர் தெளிக்கப்பட்டது.கோயிலுக்குள் மூலவர்கள் சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பாலதீபம் ஏற்றப்பட்டது.கோயில் மணி அடிக்கப்பட்டதும், மலைமேல் திருக்கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது.அதைதொடர்ந்து அப்பகுதி வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றினர். திருப்பரங்குன்றமே ஜோதி வடிவாக காட்சியளித்தது. கோயில் மூலவர் முன்பு மூன்று முறை பாலதீபம் ஆரத்தி நடந்தது. உற்ஸவர் சுவாமி, தெய்வானை திருவாட்சி மண்டபத்தில் சர்வ அலங்காத்தில் எழுந்தருளினர்.கொரோனா தடை உத்தரவால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. கோயில் முன்பு சொக்கப்பனை தீப காட்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X