பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பயிர்களில் இலை சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்தும் வழிகள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் வட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களில்இலை சுருட்டு புழு காணப்படுகிறது.பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: தற்போதைய சீதோஷ்ண நிலையில் ஆங்காங்கே இலை சுருட்டுப்புழு தாக்கம் தென்படுகிறது. பயிர்களில் நீள வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும் இலைகளின் உள்ளே இருக்கும்

திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் வட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களில்இலை சுருட்டு புழு காணப்படுகிறது.பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: தற்போதைய சீதோஷ்ண நிலையில் ஆங்காங்கே இலை சுருட்டுப்புழு தாக்கம் தென்படுகிறது. பயிர்களில் நீள வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும் இலைகளின் உள்ளே இருக்கும் புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி கய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும்வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.வளர்ச்சி பருவத்தில் எக்டேருக்கு 1500 மி.லி., பாசலான், ஒரு கிலோ அசிபேட், ஒரு கிலோ கார்டேப் ஹைட்ரோகுளோரைடு இவைகளில் ஏதாவது ஒரு மருந்தை500 லி., தண்ணீரில் கலந்து அடிக்க வேண்டும். இதன்மூலம் நோய்களை கட்டுப்படுத்தி பயிர்களை பாதுகாக்கலாம். தவிர தேவைக்கு அதிகமாக யூரியா போன்ற தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். வரப்பு புற்களை முழுமையாக நீக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X