சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டி பகுதியில் கிராமங்கள் துண்டிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.விக்கிரவாண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கெடுத்தது.இதன் காரணமாக ஒன்றியத்தின் மேற்கு பகுதியான எசாலம், எண்ணாயிரம், சின்ன தச்சூர், தென்பேர், புதுப்பாளையம், ஆசூர், பொன்னங்குப்பம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கெடுத்தது.இதன் காரணமாக ஒன்றியத்தின் மேற்கு பகுதியான எசாலம், எண்ணாயிரம், சின்ன தச்சூர், தென்பேர், புதுப்பாளையம், ஆசூர், பொன்னங்குப்பம் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.ஆர்.சி., மேலக்கொந்தை காலனியில் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து செயல் அலுவலர் அண்ணாதுரை, சப் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் ஆகியோர் ஜே.சி.பி., உதவியுடன் வடிகால் வசதி செய்து தண்ணீரை வடியச் செய்தனர்.விக்கிரவாண்டி பேரூராட்சியில் பாரதி நகர், வ.உ.சி.நகர், சத்யா நகர், கக்கன் நகர், அகத்தீஸ்வரன் கோவில் ஆகிய இடங்களில் தண்ணீர் புகுந்தது.பம்பை ஆற்றின் வெள்ளம் அய்யூர் அகரம் கிராமத்தில் புகுந்ததால் , கிராமத்தின் அனைத்து தெருக்களும் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X