பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் மக்கள் அச்சம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி உபரி நீரால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த விளாந்தாங்கல் சாலை ஜெ.ஜெ., நகர் மற்றும் கரியப்பா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் நகரையொட்டியுள்ள காரனுார் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது.இதனால், நள்ளிரவில் திடீரென
 குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் மக்கள் அச்சம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி உபரி நீரால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த விளாந்தாங்கல் சாலை ஜெ.ஜெ., நகர் மற்றும் கரியப்பா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் நகரையொட்டியுள்ள காரனுார் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது.இதனால், நள்ளிரவில் திடீரென குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்தனர். அச்சத்துடன் துாக்கமின்றி தவித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீடு இடிந்துவிழும் சூழ்நிலை நிலவியதால் அங்கு குடியிருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேறியதால் தப்பினர். நேற்று மாலை வரை குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீர் சென்றதால் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X