தமிழ்நாடு

கோமுகி, மணிமுக்தா கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! ஒரே நாள் மழையில் 101 வீடுகள் இடிந்து சேதம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கோமுகி, மணிமுக்தா ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை கன மழை பெய்தது. அணைகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது.
கோமுகி, மணிமுக்தா கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! ஒரே நாள் மழையில் 101 வீடுகள் இடிந்து சேதம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கோமுகி, மணிமுக்தா ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை கன மழை பெய்தது. அணைகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. மாவட்டத்தில், கள்ளக்குறிச்சியில், 66 மி.மீ., சின்னசேலம் 53, சங்கராபுரம் 80, உளுந்துார்பேட்டை 98, திருக்கோவிலுார் 163, கோமுகி அணை 57, மணிமுக்தா அணை 78 மி.மீ., மழை பதிவாகியது. அதிகபட்சமாக திருக்கோவிலுாரில் மழை பதிவானது.தொடர் மழையில் கோமுகி, மணிமுக்தா அணைகள் நிரம்பியதையடுத்து, ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆறு வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கோமுகி அணையில் 1,272 கன அடி நீரும், இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் மணிமுக்தா அணையில் அதிகபட்சம் 11 ஆயிரத்து 624 கன அடி வரை நேற்று தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பொதுப்பணித்துறை கட்டுபாட்டின் கீழ் கோமுகி, மணிமுக்தா அணைகள், மூன்று ஆறுகள், 335 ஏரிகள், பஞ்சாயத்திற்குட்பட்டு 380 ஏரிகளும் உள்ளது. இதில், ஆறு வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படுகிறது. இதில், பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் 251 ஏரிகள், பஞ்சாயத்து கட்டுபாட்டில் 250 ஏரிகள் முழுமையாக தண்ணீர் நிரம்பி கோடி வழியாக உபரி நீர் வழிந்தோடுகிறது.

கனமழை காரணமாக கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள், பயிர் சாகுபடி நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதில், சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, ரிஷிவந்தியம், மணலுார்பேட்டை, திருக்கோவிலுார் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. எலவனாசூர்கோட்டையில் உளுந்துார்பேட்டை - கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏரியின் உபரி நீர் வழிந்தோடியது.

மாவட்டம் முழுதும் குடிசை வீடுகள் பகுதியாக 96 வீடுகள், 2 வீடுகள் முழுமையாக சேதம் ஏற்பட்டது. பகுதி அளவில் 3 ஓட்டு வீடுகள் சேதமானது. அதேபோல், 7 கால்நடைகள் பலியாகின.மழை பாதிப்பு பகுதிகளை அமைச்சர் வேலு தலைமையில் கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X