பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை சாக்குகளுக்கு வந்து சேர்ந்தது ரூ.45 லட்சம்: * தினமலர் செய்தி எதிரொலி

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை -மதுரையில் ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டிய காலிச்சாக்குக்கான பணத்தை தினமலர் செய்தி எதிரொலியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (டி.என்.சி.எஸ்.சி.,) வழங்கியது.இம்மாவட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் 800க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை நடத்துகின்றன. இக்கடைகளுக்கு ஜெய்ஹிந்துபுரம், திருமங்கலம் உள்ளிட்ட ஆறு டி.என்.சி.எஸ்.சி., கிட்டங்கிகள் மூலம் அரிசி

மதுரை -மதுரையில் ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டிய காலிச்சாக்குக்கான பணத்தை தினமலர் செய்தி எதிரொலியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (டி.என்.சி.எஸ்.சி.,) வழங்கியது.இம்மாவட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் 800க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை நடத்துகின்றன. இக்கடைகளுக்கு ஜெய்ஹிந்துபுரம், திருமங்கலம் உள்ளிட்ட ஆறு டி.என்.சி.எஸ்.சி., கிட்டங்கிகள் மூலம் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மூடைகளில் விநியோகிக்கப்படுகின்றன.இப்பொருட்களின் காலிச்சாக்குகள் மீண்டும் டி.என்.சி.எஸ்.சி.,க்கே கொடுக்கப்பட்டு ஒரு சாக்குக்கு ரூ.25 முதல் ரூ.27 வரை ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வகையில் 2 லட்சம் சாக்குகளுக்கான பணம் ஆறு மாதங்களாக பட்டுவாடா செய்யப்படவில்லை. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக ரேஷன் கடைகளுக்கு ரூ.45 லட்சம் டி.என்.சி.எஸ்.சி.,யால் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X