தமிழ்நாடு

5,000 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் அழுகும் அபாயம்! விவசாயிகள் கவலை

Added : நவ 20, 2021
Share
Advertisement
வானுார் : வானுார் மற்றும் கிளியனுார் பகுதிகளில் கனமழை காரணமாக 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வானுார், கிளியனுார் சுற்று வட்டார பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், விவசாயத்தையே நம்பியுள்ளனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் சவுக்கை, நெல், வேர்க்கடலை போன்ற பயிர்களை அதிகளவில்
5,000 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் அழுகும் அபாயம்! விவசாயிகள் கவலை

வானுார் : வானுார் மற்றும் கிளியனுார் பகுதிகளில் கனமழை காரணமாக 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வானுார், கிளியனுார் சுற்று வட்டார பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், விவசாயத்தையே நம்பியுள்ளனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் சவுக்கை, நெல், வேர்க்கடலை போன்ற பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் 7,500 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்திருந்தனர். சில இடங்களில் ஒரு மாதத்திற்கு முன்பு தான் நடவு செய்தனர்.

இந்த நெற்பயிர்கள், பச்சை பசேல் என வளர்ந்து, நன்கு கதிர் விட்டு வந்தது.கடந்த வாரம் பெய்த கனமழையில், முழங்காலுக்கும் மேல் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கின. இதனால், மிகவும் கஷ்டப்பட்டு தண்ணீரை விவசாயிகள் வெளியேற்றினர்.இருப்பினும், 500 ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் சேதமடைந்ததாக வானுார் வட்டார வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக வானுார், கிளியனுார் பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதில், கிளியனுார் அடுத்த கிளாப்பாக்கம், பங்காரம், உப்புவேலுார், எடச்சேரி, கொஞ்சிமங்கலம், புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் முழுமையாக மழைநீர் சூழ்ந்தது. இதனால், நெற்பயிர்களை, காப்பாற்றுவது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தொடர் கன மழை காரணமாக நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்து விட்டன. இதனால் பல இடங்களில் நெற்பயிர்கள் அழுகி வருகிறது. இதே நிலை நீடித்தால், முற்றிலும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்' என்றனர்.

வானுார் வட்டார வேளாண் அதிகாரி சரவணன் கூறுகையில், 'கடந்த வாரம் பெய்த மழையில் 500 ஏக்கர் அளவிற்கு நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டது. தற்போது பெய்த மழைக்கு, 5,000 ஏக்கர் அளவிற்கு நெற்பயிர்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகளை பார்வையிட்டு, கணக்கெடுத்து வருகிறோம்' என்றார்.


பாதிப்பு ஏன்?


கனமழைக்கு வானுார் பகுதியைக் காட்டிலும், கிளியனுார் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி, ஓடைகள், ஆறுகள் வழியாக கழுவேலிக்கு மழைநீர் செல்கிறது. இவ்வாறு செல்லும் வாய்க்கால்கள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக விவசாய பயிர்களில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற முடியாத நிலை தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை சீர் செய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் கனமழைக்கு விவசாயிகள் சிந்தும் கண்ணீரை துடைக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X