சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து போலீசாரால்  ஆக்சிஜனின்றி தவித்த மூதாட்டி;  கமிஷனரிடம் புகார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை --மதுரையில் அவசர சிகிச்சைக்காக ஆக்சிஜன் செறிவூட்டி கொண்டு வந்த ஆம்புலன்ஸில் பம்பரை கழட்ட கூறி ஒரு மணி நேரம் போக்குவரத்து போலீசார் காலதாமதம் செய்ததால் சுரபி அறக்கட்டளை தாய்மடி இல்லத்தில் மூதாட்டி ஒருவர் ஆக்சிஜனின்றி தவித்தார்.இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நிர்வாக இயக்குனர் சேதுமுத்துராஜ் புகார் செய்துள்ளார். அதில், நேற்று காலை

மதுரை --மதுரையில் அவசர சிகிச்சைக்காக ஆக்சிஜன் செறிவூட்டி கொண்டு வந்த ஆம்புலன்ஸில் பம்பரை கழட்ட கூறி ஒரு மணி நேரம் போக்குவரத்து போலீசார் காலதாமதம் செய்ததால் சுரபி அறக்கட்டளை தாய்மடி இல்லத்தில் மூதாட்டி ஒருவர் ஆக்சிஜனின்றி தவித்தார்.இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நிர்வாக இயக்குனர் சேதுமுத்துராஜ் புகார் செய்துள்ளார். அதில், நேற்று காலை பசுமலை மூலக்கரையில் போக்குவரத்து போலீசார் ஆம்புலன்சை நிறுத்தி பம்பர் கழட்ட கூறி அபராதம் விதித்தனர். 'அபராதம் கட்டுகிறோம். அவசரமாக மூதாட்டிக்கு ஆக்சிஜன் தேவை. மருத்துவமனை அழைத்து செல்லும் நிலையும் வரலாம் செல்ல அனுமதியுங்கள்' என்று கூறினோம். அதை போலீசார் கண்டு கொள்ளாமல் ஒருமையில் பேசி கடுமை யாக நடந்து கொண்டதோடு அனுமதிக்கவும் மறுத்தனர்.திருநகர் 3வது பஸ் ஸ்டாப் தனியார் பிரவுசிங் சென்டரில் அபராதம் கட்டி, ரசீது காட்டி, பம்பர் கழட்டினால் தான் அனுப்புவோம் என ஒரு மணி நேரம் காலதாமதம் செய்து அனுப்பினர். இதனால், மூதாட்டி உடல் நிலை மிகவும் மோசமாகி கடும் வேதனை அனுபவித்தார். சமூக சேவை செய்யும் எங்களை போலீசார் கடுமையாக நடத்தியது வேதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X