பொது செய்தி

தமிழ்நாடு

அரசு 'டப்பா' பஸ்களை ஓடி ஓடி பிடித்த அதிகாரிகள் : உயிருடன் விளையாடுகிறதா போக்குவரத்து கழகம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை-மதுரையில் அரசு பஸ்கள் பராமரிக்கப்படாமலும், பல்வேறு பழுதுகளுடனும் இயக்கப்படுவதாக பயணிகள் சார்பில் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ஆய்வு நடத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.ஆர்.டி.ஓ.,க்கள் சிங்காரவேலு, செல்வம், சித்ரா மற்றும் மோட்டார் ஆய்வாளர்கள் குழு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டன. இதில் விரைவு பஸ்கள் உட்பட 922 பஸ்கள் ஆய்வு

மதுரை-மதுரையில் அரசு பஸ்கள் பராமரிக்கப்படாமலும், பல்வேறு பழுதுகளுடனும் இயக்கப்படுவதாக பயணிகள் சார்பில் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து ஆய்வு நடத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.ஆர்.டி.ஓ.,க்கள் சிங்காரவேலு, செல்வம், சித்ரா மற்றும் மோட்டார் ஆய்வாளர்கள் குழு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டன. இதில் விரைவு பஸ்கள் உட்பட 922 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. 40 சதவீதம் பஸ்களில் இருக்கைகள் கிழிந்து கிடப்பது, பஸ்களில் சைடு தகரம் நீட்டிக்கொண்டிருப்பது, மேற்கூரை கிழிந்து தொங்கியது,

இருக்கைகளில் கைப்பிடி இல்லாதது போன்ற பழுதுகளை நீக்கிய பின் இயக்கவும், 4 சதவீதம் பஸ்கள் ரோடுகளில் இயக்க தகுதியற்றவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.பயணிகள் கூறுகையில் “பயணிகள் உயிர்களுடன் விளையாடும் அளவிற்கு தகுதியற்ற பஸ்களை இயக்க உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜாக்கிரதையாக செயல்பட்ட அதிகாரிகள் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X