பொது செய்தி

தமிழ்நாடு

வீடு வீடாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு செவிலியர்கள் எதிர்ப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை -வீடு வீடாக கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு ரத்து செய்யக்கோரி கிராம சுகாதார, பகுதி நேர மற்றும் சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கூட்டமைப்பு நிர்வாகிகள் பாரதி, பாண்டியம்மாள், சின்னபொண்ணு, பிரேம் ஆனந்த் ஆகியோர் கூறியதாவது: மருத்துவமனைகளில் தாய் சேய் நலப்பணி, கர்ப்பிணிகளை கணக்கெடுக்கும் பணி, உதவித்தொகை
 வீடு வீடாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு செவிலியர்கள் எதிர்ப்பு

மதுரை -வீடு வீடாக கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு ரத்து செய்யக்கோரி கிராம சுகாதார, பகுதி நேர மற்றும் சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டமைப்பு நிர்வாகிகள் பாரதி, பாண்டியம்மாள், சின்னபொண்ணு, பிரேம் ஆனந்த் ஆகியோர் கூறியதாவது: மருத்துவமனைகளில் தாய் சேய் நலப்பணி, கர்ப்பிணிகளை கணக்கெடுக்கும் பணி, உதவித்தொகை வழங்குவது போன்ற அன்றாட பணிகளை செய்வதுடன் வீடு வீடாக சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியையும் செய்ய முடியவில்லை. ஒரு பாட்டில் தடுப்பூசியில் அடுத்தடுத்து 10 பேருக்கு செலுத்தாவிட்டால் தடுப்பூசி வீணாகிறது.

அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டால் எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். எனவே வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். எங்களது விடுப்பை பாதிக்காத வகையில் வாரம் ஒரு நாள் முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தும் நடைமுறையை அரசு கொண்டு வரவேண்டும். கிராமப்புறங்களில் மினி கிளினிக், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களுக்கு எங்களை நியமிக்க வேண்டும். எங்களுக்கான பதவி உயர்வை ஏற்கனவே திட்டமிட்டபடி சீனியாரிட்டி அடிப்படையில் 50 சதவீதம் வழங்க வேண்டும் என்றனர்.அரசு ஊழியர்கள் முறையீடுஅரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் கூறியதாவது: தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட கிராம சுகாதார செவிலியர்கள் தயாராகவுள்ளனர்.

குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு தடுப்பூசி செலுத்த நிர்பந்திக்கப்படுகிறது. இதனால் இரவு வரையில் அவர்கள் பணிபுரிய வேண்டியுள்ளதால் பாதுகாப்பற்ற நிலையுள்ளது. தடுப்பூசி செலுத்த பொதுமக்களை கட்டாயப்படுத்த முடியாது. வீடு வாரியாக சென்று தடுப்பூசி செலுத்தும் செவிலியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையுள்ளது. எனவே சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X