பொது செய்தி

தமிழ்நாடு

கட்சி அலுவலகமா... விருப்பமனு வினியோகம் குறித்து பா.ஜ., புகார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை -நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அனைத்துகட்சிகளும் விருப்ப மனு விநியோகம் ஆரம்பித்துவிட்டன. மதுரை வடக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதி, கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்கள் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நவ.,22 காலை 10:30 மணி முதல் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

மதுரை -நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அனைத்துகட்சிகளும் விருப்ப மனு விநியோகம் ஆரம்பித்துவிட்டன. மதுரை வடக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதி, கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்கள் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நவ.,22 காலை 10:30 மணி முதல் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதுகுறித்து பா.ஜ., நகர் தலைவர் டாக்டர் சரவணன், கலெக்டர் அனீஷ்சேகரிடம் புகார் அளித்துள்ளார்.அதில், இந்த அறிவிப்பு தேர்தல் விதிமுறைக்கு எதிராக, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எம்.எல்.ஏ., அலுவலகத்தை தி.மு.க., கட்சி அலுவலகம் போல் பயன்படுத்துவதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.மூர்த்தி அறிவிப்பு மதுரை வடக்கு தி.மு.க., சார்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து இன்று (நவ.,20) முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. அய்யர்பங்களா கற்பக விநாயகர் கோயில் தெரு சக்திநகர் கட்சி அலுவலகத்தில் காலை 10:45 மணி முதல் மனுக்கள் பெறப்படும். விருப்பமுள்ளவர்கள் மனுக்கள் அளிக்கலாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X