சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசாரணை கமிஷன் அமைக்க ஆர்ப்பாட்டம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை -பொதுப்பணித்துறையின் பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் மீது விசாரணை கமிஷன் அமைக்ககோரி பொதுப்பணித்துறை ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் நீதிராஜன், உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுப் பணித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்

மதுரை -பொதுப்பணித்துறையின் பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் மீது விசாரணை கமிஷன் அமைக்ககோரி பொதுப்பணித்துறை ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் நீதிராஜன், உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுப் பணித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வரதமுனீஸ்வரன் கூறியதாவது: அலுவலக பெண் ஊழியர்களை சுகுமார் ஒருமையில் பேசுகிறார். முதல்வர் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. ஊழியர்களின் பதவி உயர்வில் கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்துள்ளார். ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திற்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பராமரிப்பு செலவு ஒதுக்கப்படுகிறது. இதில் 10 சதவீதம் கூட செலவு செய்வதில்லை. ஆனால் கண்மாயில் கசிவு, சேதம், உடைப்பு ஏற்பட்டால் கீழ்நிலைப் பணியாளர்களுக்கு மெமோ அனுப்புகிறார். அவர் மீதான புகார்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X