பொது செய்தி

இந்தியா

மாலூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோலார் : மாலுார் பஸ் நிலையத்தில், பயணியருக்கு கழிப்பறை, சுத்தமான குடிநீர் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் தொற்று நோய்கள் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.கர்நாடகா எல்லை பகுதியான கோலாரின் மாலுாருக்கு, பல்வேறு நகரங்கள், தமிழகம், ஆந்திராவிலிருந்து, அரசு, தனியார் பஸ்களில் மாணவர்கள், வியாபாரிகள், பெண்கள், ஊழியர்கள் என, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து

கோலார் : மாலுார் பஸ் நிலையத்தில், பயணியருக்கு கழிப்பறை, சுத்தமான குடிநீர் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.

இதனால் தொற்று நோய்கள் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.கர்நாடகா எல்லை பகுதியான கோலாரின் மாலுாருக்கு, பல்வேறு நகரங்கள், தமிழகம், ஆந்திராவிலிருந்து, அரசு, தனியார் பஸ்களில் மாணவர்கள், வியாபாரிகள், பெண்கள், ஊழியர்கள் என, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இவ்வளவு பயணியர் வரும், மாலுார் பஸ் நிலையத்தில், கழிப்பறை, சுத்தமான குடிநீர், துாய்மை உட்பட, எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.பொது பஸ் நிலையத்தில், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளுக்காக, அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகிறது. கழிப்பறைகள் கட்டியுள்ளது.

ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால், சரியான நிர்வகிப்பின்றி துர்நாற்றம் வீசி, நோய் பரவ காரணமாகிறது.நோய் பரப்பும் இடங்களின் வரிசையில், மாலுார் பஸ் நிலையமும் சேர்ந்துள்ளது. இங்கு கழிப்பறை இருந்தாலும், பயணியர் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவலமாக உள்ளது. ஆண்களை விட, பெண் பயணியர் அதிகம் அவதிப்படுகின்றனர்.குறுகலான இடத்தில், பஸ் நிலையம் இருப்பதால், தனியார் பஸ்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், பயணியரை பஸ் நிலையத்தில் இறக்கி விட வரம் கார்கள், நிலையத்துக்குள் செல்வதால், பஸ் ஓட்டுனர்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. பஸ் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதால், சுமூகமான போக்குவரத்துக்கு தொந்தரவு ஏற்படுகிறது.இங்கு கண்காணிக்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாலும்,

இதன் நிர்வகிப்பு பொறுப்பு, போலீஸ் நிலையத்திடம் உள்ளது. பயணியரின் பர்ஸ், மொபைல், லக்கேஜ் என, மற்ற பொருட்கள் திருட்டு நடக்கிறது.துாய்மை என்பதே இல்லை. ஊகிக்கவும் முடியாத அளவுக்கு நாறுகிறது. பயணியர் வெற்றிலை, பாக்கை மென்று உமிழ்வதால், மற்ற பயணியர் நடக்கவும் அருவருப்படைகின்றனர்.மாலையானவுடன், பஸ் நிலையத்தை சுற்றிலும், பானிபூரி, முட்டை, இறைச்சி, மீன் உணவு கடைகள் திறக்கப்படுகிறது. பயணியர் மூக்கை மூடிக்கொண்டே செல்ல வேண்டியுள்ளது. பஸ் நிலையத்தில், இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கண் மூடி அமர்ந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X