பொது செய்தி

இந்தியா

கடனை திருப்பி தராத டிரைவர் நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : இரண்டு லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத, வாடகை கார் ஓட்டுனரை கடத்தி சென்று, நிர்வாணமாக்கி நடனமாட வைத்து, மொபைலில் பதிவு செய்த விஷமிகள், அதை வீடியோவில் வைரலாக்கியுள்ளனர்.பெங்களூரு கே.ஆர்.புரத்தில் வசிக்கும் தயாள் மஞ்சா எனபவர் ஜோதிடம் கூறுகிறார். இவர் வெளிநாட்டுக்கும் சென்று வந்தவர். இவரிடம், வாடகை கார் ஓட்டுனர் ஒருவர், 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

பெங்களூரு : இரண்டு லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத, வாடகை கார் ஓட்டுனரை கடத்தி சென்று, நிர்வாணமாக்கி நடனமாட வைத்து, மொபைலில் பதிவு செய்த விஷமிகள், அதை வீடியோவில் வைரலாக்கியுள்ளனர்.

பெங்களூரு கே.ஆர்.புரத்தில் வசிக்கும் தயாள் மஞ்சா எனபவர் ஜோதிடம் கூறுகிறார். இவர் வெளிநாட்டுக்கும் சென்று வந்தவர். இவரிடம், வாடகை கார் ஓட்டுனர் ஒருவர், 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அதை திருப்பி தரவில்லை.இதனால் கோபமடைந்த தயாள் மஞ்சா, கடன் வாங்கிய வாடகை கார் ஓட்டுனருக்கு பாடம் புகட்ட திட்டமிட்டார்.

இதன்படி இவரை அழைத்து வரும்படி, கணேஷ் என்பவரை அனுப்பினார். கடந்த 10ல், அந்த ஓட்டுனரை, இருவரும் முல்பாகல் அருகில் அழைத்து சென்றனர்..3
அங்கு, உருட்டுக்கட்டையால் தாக்கி, நிர்வாணமாக்கி நடனமான வைத்துள்ளனர். அந்த காட்சிகளை தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, மீண்டும் அவரை தாக்கி அனுப்பினர். இந்த வீடியோவை வாட்ஸ் ஆப் குரூப்பில் அனுப்பினர்.வீட்டுக்கு வந்த ஓட்டுனர், மிகவும் சோர்வாக இருந்தார். ஆனால் நடந்த சம்பவத்தை, குடும்பத்தினரிடம் கூறவில்லை. மறுநாள் கணவரின் நிர்வாண நடன வீடியோ வைரலான விஷயம், ஓட்டுனரின் மனைவிக்கு தெரிந்தது.

இதைப்பற்றி கணவரிடம் விசாரித்த போது, உண்மையை கூறினர்.மனம் நொந்த மனைவி, கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார்.போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர். தன் மீது புகார் பதிவானதும், தயாள் மஞ்சா டில்லிக்கு சென்று, அங்கிருந்து அமெரிக்காவுக்கு தப்பியோடி விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X