பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
இது, கோலார் கூத்து!சட்ட மேலவையின் 25 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் தேர்தலில், 23 தொகுதிகளுக்கு பூகாரங்க 'சீட்' ரெடி செய்துட்டாங்க.ஆனால், சிலிக்கான் சிட்டியின் ரூரல், கோலாரு ஆகிய ரெண்டு தொகுதிகளுக்கு தோதான ஆளு கிடைக்கல. வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டு வெச்சிருக்காங்க.கோலாரில், கை கட்சி வேட்பாளராக பத்து பேர் சீட் எதிர்ப்பார்த்தாங்க. லோக் சபா தேர்தலில் கை காரரை

இது, கோலார் கூத்து!

சட்ட மேலவையின் 25 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் தேர்தலில், 23 தொகுதிகளுக்கு பூகாரங்க 'சீட்' ரெடி செய்துட்டாங்க.

ஆனால், சிலிக்கான் சிட்டியின் ரூரல், கோலாரு ஆகிய ரெண்டு தொகுதிகளுக்கு தோதான ஆளு கிடைக்கல. வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டு வெச்சிருக்காங்க.

கோலாரில், கை கட்சி வேட்பாளராக பத்து பேர் சீட் எதிர்ப்பார்த்தாங்க. லோக் சபா தேர்தலில் கை காரரை தோற்கடிச்ச அதே கட்சிக்கார கும்பல், கூட்டுறவு வங்கிக்காரரை வேட்பாளராக ஆக்கி இருக்காங்க.

'மாஜி' செங்கோட்டை முனி தோல்விக்கு பாதையமைத்த வங்கிக்காரருக்கு, சீட் தர கூடாதென வாய் வீச்சு குஸ்தி கோதாவில் முனி இறங்கினாரு; அவர் பேச்சு எடுபடல.

அதனாலே, பழையபடி அவர், கை பக்கம் சாதகமா இருப்பாரா என்பது சந்தேகமே. இவர் பல கை காரர்களை அசம்பிளிக்கு போக விடாமல் தடுத்தது போல, வங்கிக்காரருக்கு எதிராக வேலை செய்யமாட்டார்னு உறுதியா சொல்ல முடியாது.

பூ பக்கம் சாய வாய்ப்புகள் இல்லேனும் சொல்ல முடியாது. இன்னும் கூட அவர் கோலார் தமது பிடிக்குள் கை கட்சி இருப்பதாகவே நெனப்பு இருக்குதே.. இவரோட மகள் கூட ஒத்துப்போக வாய்ப்பே இல்லையாமே!

'பிட் காயினில்' யாருக்கு யார் தொடர்பு?

'பிட்காயின்' விவகாரத்தை ஊதி பெரிசு படுத்துற வேலையை எதிர்க் கட்சித் தலைவர் செய்து வராரு. அவர் மறுபடியும் சி.எம்., ஆகணும்னா, அவருக்கு போட்டியா இருக்கிற ஸ்டேட் தலைவரை, அவரின் நெருக்கமானவர்களை அழுத்தவும், அதே நேரத்தில் பூ காரங்க பேரில் அவதுாறு பரப்பி ஆதாயம் தேடணும்னு கிடைக்கிற மேடை எல்லாம் பிட் காயின் பற்றி பிட்டு பிட்டா போட்டு தள்ளுறாரு.

இதுக்கு பூக்கார சி.எம்., சும்மா இருப்பாரா; யாருக்கு யார் உறவு. ராத்திரி நேரத்தில் யாருக்கு என்ன நட்பு தொடர்பு எல்லாமே விரைவில் வெளி வர போகுது.

கைகாரர்களோட பிட்காயின் மோசடி மாநிலமே தெரிஞ்சிக்க போகுதுன்னு குண்டு ஒண்ணு போட்டிருக்காரு!

மாண்டியா தொகுதியில் தலைவர் ஆளு!

கூட்டுறவுத்துறை அமைச்சரின் அரசியல் செக்ரட்டரியா இருந்தவரு, அவரை விட்டு வெளியேறிய மாண்டியாக்காரர், சில காலம் கை கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்திருக்கிறார். இவர் மாநில தலைவரின் அன்பை பெற்றவராக இருந்ததால், இவருக்கு கை கட்சி மாண்டியா வேட்பாளர், 'சான்ஸ்' கிடைச்சிருக்கு.

மாண்டியாவில் பலமிக்க பல வி.ஐ.பி.,கள் இருந்தும் எம்.எல்.சி., 'சீட்' புதுமுகமான 'தினேஷ் கூலிகவுடா' என்பவருக்கு கிடைத்திருப்பதன் மூலம் மாநில கை கார தலைவர் கை ஓங்கி இருக்குதாம். இதில் எதிர்க்கட்சித் தலைவரின் சிபாரசு எடுபடாமல் போனதாம்.

சீட் கிடைச்சாலும் ஓட்டை பிரிக்காமல் சிதறடிக்காமல், உள்குத்து வேலையை பார்க்காமல் இருப்பாங்களா?

15 இடம் கிடைக்க போகுதாம்!

'ஜன ஸ்வராஜ் யாத்திரை' துவங்கும் முன், ஹுப்பள்ளி கார மாஜி சி.எம்., தம் பூ கட்சி 15 தொகுதிகளில் ஜெயிக்குமென ஆரூடம் சொன்னாரு.

பூக்கார பி.எம்., க்கு சமமானவங்க கை கட்சியில் ஒருத்தரும் கிடையாது. கை கட்சிக்குள் தலைவர்களுக்கு தட்டுப்பாடு இருக்குது.

பூ கட்சியின் செல்வாக்கு எம்.எல்.சி., தேர்தலில் எதிர்க்கட்சிகள் பார்க்கத்தானே போறாங்க. இந்த முடிவுக்கு பின் அசம்பிளி தேர்தல் வரத்தானே போகுது.

கிராம பஞ்சாயத்து களுக்கு முழு அதிகாரம் வழங்கியது பூ ஆட்சி என்பதால், மக்கள் செல்வாக்கு பூ பக்கமேன்னு அடிச்சு சொன்னாரு. கை காரங்க இன்னும் 'பிட் காயின்' விவகாரத்தை விட்டு வெளியே வரவில்லை!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X