பொது செய்தி

இந்தியா

அகங்காரத்துடன் நடக்கும் காங்., கூறுகிறார் அமைச்சர் ஸ்ரீராமுலு

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஹூப்பள்ளி : "சட்டசபை இடைத்தேர்தலில், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் அகங்காரத்துடன் நடந்து கொள்கிறது. அவர்களுக்கு மேலவை தேர்தலில், பா.ஜ., பதிலடி கொடுக்கும்," என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.ஹூப்பள்ளியில், அவர் நேற்று கூறியதாவது:காங்கிரஸ் தலைவர்களுக்கு, தேர்தலை சந்திக்கவும், அறிக்கை விட மட்டுமே தெரியும். அவர்கள் கட்சி தலைவர்

ஹூப்பள்ளி : "சட்டசபை இடைத்தேர்தலில், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் அகங்காரத்துடன் நடந்து கொள்கிறது. அவர்களுக்கு மேலவை தேர்தலில், பா.ஜ., பதிலடி கொடுக்கும்," என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.

ஹூப்பள்ளியில், அவர் நேற்று கூறியதாவது:காங்கிரஸ் தலைவர்களுக்கு, தேர்தலை சந்திக்கவும், அறிக்கை விட மட்டுமே தெரியும். அவர்கள் கட்சி தலைவர் ராகுல், 'பார்ட் டைம்' அரசியல்வாதி. தேர்தல் நேரத்தில் மட்டுமே காட்சியளிப்பார். மேலவை தேர்தலில், பா.ஜ., 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். சாமர்த்தியம் இருந்தால், எங்களை விட அதிக இடங்களில், காங்கிரஸ் வெற்றி பெற்று காண்பிக்கட்டும். சட்டசபை இடைத்தேர்தலில், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் அகங்காரத்துடன் நடந்து கொள்கிறது. அவர்களுக்கு மேலவை தேர்தலில், பா.ஜ., பதிலடி கொடுக்கும்.எஸ்.டி., பிரிவினர் வயிற்றுப்பிழைப்புக்காக, பா.ஜ.,வில் சேரவில்லை. எங்கள் கட்சி இப்பிரிவினருக்கு, சிறப்பு அந்தஸ்து அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து பிரிவுகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கும், முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.கிராம பஞ்சாயத்துகளின், அனைத்து உறுப்பினர்களும், பா.ஜ., வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். தொண்டர்களின் உழைப்பால், கட்சி இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X