சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் சுவர் இடிந்து  விழுந்து விபத்து; 5 பேர் உயிர் தப்பினர்

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டின் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் காலனி முருகன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் குமார், 48; இவர் நேற்று முன்தினம் மாலை மனைவி மற்றும் இரு மகள்கள், ஒரு மகன் ஆகிய 5 பேரும் வீட்டின் உள்ளே இருந்தனர். அப்போது கன மழை பெய்ததால் வீட்டின் சுவர் திடீரென விழுந்தது. சுவர்
 வீட்டின் சுவர் இடிந்து  விழுந்து விபத்து; 5 பேர் உயிர் தப்பினர்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டின் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் காலனி முருகன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் குமார், 48; இவர் நேற்று முன்தினம் மாலை மனைவி மற்றும் இரு மகள்கள், ஒரு மகன் ஆகிய 5 பேரும் வீட்டின் உள்ளே இருந்தனர். அப்போது கன மழை பெய்ததால் வீட்டின் சுவர் திடீரென விழுந்தது. சுவர் வெளிப்புறம் விழுந்ததால் உள்ளே இருந்த ஐந்து பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.

புவனகிரிபுவனகிரி தாலுகா, மருதுார் அருகே அம்பாள்புரம் சடையன் மனைவி ராமாயி,75; இவரது வீடு சேதமடைந்ததால் நேற்று முன் தினம் இரவு, பக்கத்து தெருவில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். காலையில் வந்து பார்த்த போது வீடு இரவு பெய்த மழையில் விழுந்து சேதமாகி இருந்தது. அவர் இரவு வீட்டில் தங்காததால் தப்பினார். இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X