பொது செய்தி

இந்தியா

சின்ன சின்னதாய்

Added : நவ 20, 2021
Share
Advertisement
103 வயது மூதாட்டி மறைவுஆறு தலைமுறை கண்ட குப்பம்மா, 103, என்ற மூதாட்டி தங்கவயலில் நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.மாரிகுப்பம், சவுத் கில்பர்ட்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் குப்பம்மா. இவர் தங்கச் சுரங்க தொழிலாளி கிருஷ்ணன் என்பவரின் மனைவி. கிருஷ்ணன் இறந்து 40 ஆண்டுகள் கடந்து விட்டது. இவர் சுரங்கத்தொழிலாளிகளுக்கு மட்டுமே ஏற்படும்,

103 வயது மூதாட்டி மறைவு

ஆறு தலைமுறை கண்ட குப்பம்மா, 103, என்ற மூதாட்டி தங்கவயலில் நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மாரிகுப்பம், சவுத் கில்பர்ட்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் குப்பம்மா. இவர் தங்கச் சுரங்க தொழிலாளி கிருஷ்ணன் என்பவரின் மனைவி. கிருஷ்ணன் இறந்து 40 ஆண்டுகள் கடந்து விட்டது. இவர் சுரங்கத்தொழிலாளிகளுக்கு மட்டுமே ஏற்படும், 'சிலிகாசிஸ்' என்ற நோயால் இறந்தார்.

கிருஷ்ணன்- குப்பம்மாள் தம்பதிக்கு, 5 பெண்கள் 4 ஆண்கள் என 9 பிள்ளைகள். இவர்களுக்காக 60 ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வந்த மூதாட்டி குப்பம்மா 6 தலைமுறையினரும் குடும்பமாக வாழ்ந்தவர்.

மூதாட்டியின் மறைவுக்கு வட்டார பிரமுகர்கள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திரா சிலைக்கு மாலை

கொட்டும் மழையிலும் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழாவை நேற்று தங்கவயல், ராபர்ட்சன் பேட்டையில் கொண்டாடினர்.

நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் பூங்காவில் அமைந்துள்ள இந்திரா சிலைக்கு காந்தி காமராஜ் தேசிய மன்றத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன் மாலை அணிவித்தார். வக்கீல் கிருஷ்ண மூர்த்தி, திருமுருகன், கண்ணன், கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். இனிப்புகள் வழங்கினர்.

வெள்ள பாதிப்பு

பங்கார்பேட்டை ரயில்வே பாலம் அருகே மழை வெள்ளம் புரண்டோடுகிறது.

இதனால் பங்கார்பேட்டை- பூதிகோட்டை சாலையில் நேற்று போக்குவரத்து பெரிதும் பாதித்துள்ளது.

பலரின் வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் நீரை வெளியேற்ற அல்லல் பட்டனர்.

பங்கார்பேட்டை தொட்டக்கெரே ஏரி நிரம்பி சாலைகளில் வழிந்தோடுகிறது. 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் ஏரி நிரம்பியுள்ளது.

பேத்தமங்களா ஏரி திறப்பு

தங்கவயலின் குடிநீருக்கு ஜீவாதாரமாக விளங்கும் பேத்தமங்களா ஏரி நிரம்பியுள்ளது. கடந்த வாரம் இந்த ஏரியின் நான்கு மதகுகளை மட்டுமே திறந்து இருந்தனர்.

ஆனால், நேற்று 11 மதகுகளையும் திறந்துள்ளனர். இதனால், பேத்தமங்களா பாலாற்று நீர் தமிழகத்தின் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாய்ந்தோடுகிறது.

கோலார் கலெக்டர் ஆய்வு

கோலாரில் மழை பாதிப்பு பகுதிகளை கோலார் மாவட்ட கலெக்டர் செல்வமணி அதிகாரிகளுடன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோலாரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்த வலியுறுத்தினார்.

கோலார் நகராட்சி தலைவர் ஸ்வேதா சப்ரீஸ், நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சூனியக்காரர்களிடம் விசாரணை

கோலார் அன்னேனஹள்ளி கிராமத்தின் கங்கப்பா, 56, என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சிக்கன்னா, 45, சீனிவாஸ், 39, மிருதஞ்செயா, 43, ஆகிய மூன்று பேர் நேற்று பில்லி, சூனியம், மாய மந்திரம் செய்வதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.

அந்த மூன்று நபர்களையும் பிடித்து, கோலார் போலீசாரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

இவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பைக் விபத்தில் வாலிபர் பலி

கோலார் - முல்பாகல் சாலை கம்மதத்தி கிராஸ் அருகே தனியார் பஸ்சும் இருசக்கர வாகனமும் நேற்று மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பெங்களுருக்கு செற்றுக் கொண்டிருந்த ஆந்திர மாநிலம், அனந்தபுராவை சேர்ந்த நாராயணசாமி, 25, பலியானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X