பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : நவ 20, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டனர்.தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட கடலுார் குமரப்பன் நகர் மற்றும் குண்டுஉப்பலவாடி, கண்டக்காடு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை, கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர். கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட உப்பலவாடி,

கடலுார் : கடலுாரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டனர்.

தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட கடலுார் குமரப்பன் நகர் மற்றும் குண்டுஉப்பலவாடி, கண்டக்காடு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை, கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர். கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட உப்பலவாடி, ஓம்சக்தி நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு, தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கே.என்.பேட்டை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள திருவந்திபுரம் மணிநகர், புதுநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 102 பேரை சந்தித்து தேவைகளை கேட்டறிந்து, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், ஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X