மைசூரு : இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாமுண்டேஸ்வரி தொகுதியில் தோல்வியடைந்த மன வருத்தம், சித்தராமையா மனதிலிருந்து இன்னும் மறையவில்லை என்பதை நேற்று நடந்த சம்பவம் உணர்த்தியது.
சட்ட மேலவை தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிறது; வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, நேற்று மைசூருக்கு வந்திருந்தார்.அவரது இல்லம் முன் குவிந்த, மரி கவுடா ஆதரவாளர்கள், ' மரி கவுடாவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும். இன்னாள் எம்.எல்.சி., தர்மசேனாவுக்கு, எக்காரணத்தை கொண்டும், டிக்கெட் தரக்கூடாது' என வலியுறுத்தினர். அவரது காரை வழிமறித்து கோஷமிட்டனர்.இதனால் கடுப்படைந்த சித்தராமையா, காரை விட்டு கீழே இறங்கி, முக கவசத்தை நீக்கிவிட்டு, "அனைவரும் சேர்ந்து என்னை தோற்கடித்துவிட்டு, இப்போது டிக்கெட் கேட்டு, இங்கு வந்துள்ளீர்களா... உங்களுக்கு வெட்கமில்லையா... வெளியே செல்லுங்கள்," என திட்டி அனுப்பினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE