பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள் - பெங்களூரு

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஏரியை பார்வையிட்ட அமைச்சர்தார்வாட்: தார்வாட் அருகே உள்ள ஹொல்திகோட்டே ஏரி நிரம்பி கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள வயல்களுக்குள் ஏரி தண்ணீர் புகுந்து விட்டது. சர்க்கரை ஆலைத்துறை அமைச்சர் சங்கர் முனேனா பாட்டீல் நேற்று பார்வையிட்டு பரிசீலனை செய்தார்.அப்போது ஏரியை துார் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.சேற்றில் சிக்கிய

ஏரியை பார்வையிட்ட அமைச்சர்

தார்வாட்: தார்வாட் அருகே உள்ள ஹொல்திகோட்டே ஏரி நிரம்பி கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள வயல்களுக்குள் ஏரி தண்ணீர் புகுந்து விட்டது. சர்க்கரை ஆலைத்துறை அமைச்சர் சங்கர் முனேனா பாட்டீல் நேற்று பார்வையிட்டு பரிசீலனை செய்தார்.

அப்போது ஏரியை துார் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சேற்றில் சிக்கிய பஸ்!

பாகல்கோட்: பாகல்கோட் இலகல்லில் இருந்து அங்கனாளா நோக்கி அரசு பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. பலத்த மழையால் வழியில் சாலை பணிகள் நடந்து கொண்டிருந்த இடம் சேறும் சகதிமாக மாறி இருந்தது.

இதில், பஸ்சின் பின் சக்கரம் புதைந்து கொண்டது. பஸ்சை சேற்றில் இருந்து வெளியே எடுக்க டிரைவர் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.

இதனால் பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி வேறு வாகனங்களை பிடித்து சென்றனர்.

மிருக காட்சி சாலையில் புலி பலி

மைசூரு: சாமராஜ் நகர் பண்டிப்புராவில், 7 வயதான 'மூகா' என்ற புலி இருந்தது. இது சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்து வந்தது.

அக்டோபர் 20ல் யானையுடன் ஏற்பட்ட மோதலில் தந்தம் பலமாக குத்தியதால் இந்த புலி படுகாயம் அடைந்தது. மைசூரு மிருக காட்சி சாலையில் சிகிச்சை பெற்று வந்த புலி, நேற்று பலனின்றி உயிரிழந்தது.

பாடம் நடத்திய பஞ்சாயத்து அதிகாரி

பாகல்கோட்: பாகல்கோட் நவநகர் ஆதர்ஷா வித்தியாலயா பள்ளியில் நேற்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு வினாடி -- வினா போட்டி நடந்தது. இதை மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பூபாலன் தொடங்கிவைத்து சிறிது நேரம் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

சட்ட சேவை வார விழா

சித்ரதுர்கா: சித்ரதுர்கா கலையரங்கில் நேற்று மாவட்ட சுதந்திர தின பொன் விழா, சட்ட சேவை வார விழா நிகழ்ச்சி நடந்தது.

இதில், மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மனகோளி பிரேமாவதி, மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது நீதிபதி பிரேமாவதி கூறுகையில், “ சிறுமிகளுக்கு நடக்கும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார்.

அம்சலேகாவுக்கு ஆதரவாக போராட்டம்

எஸ்.ஐ., மீது நடவடிக்கைக்கு மனு

ராய்ச்சூர்: ராய்ச்சூர் அருகே உள்ள முதகல் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ராகேஷ் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை, புகாரளிக்க வந்தவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவரை பணிநீக்கம் செய்யுமாறு தலித் சங்கர்ஷ சமிதி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

முத்தாலிக் கைதை கண்டித்து போராட்டம்

கதக்: கோலார் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத முத்தாலிக்கை போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து கதக்கில ஸ்ரீராம சேனை தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் பசவராஜ் பொம்மை, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் போட்டோக்களை எரித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

காளிகா தேவி தேர்த்திருவிழா

பெலகாவி: பெலகாவி ஹுக்கேரி அருகே உள்ள யரனாளா கிராமத்தில் உள்ள காளிகாதேவி தேர்த்திருவிழா நேற்று தொடங்கியது. இதில், சித்து சமஸ்தான மடத்தின் மடாதிபதி சிவலிங்கேஸ்வரா சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கொண்டாட்டம்!

உத்தர கன்னடா: மத்திய விவசாய சட்டத்தை திரும்ப பெற்றதை வரவேற்று பூமி உரிமை போராட்ட கமிட்டியினர் நேற்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

1,843 பேர் கண் தானம்

விஜயநகரா: விஜயநகரா ஹொஸ்பேட்டில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடிகர் புனித் ராஜகுமாரின் 21வது நினைவு நாள் அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு கண்தானம், ரத்த தானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விளையாட்டு வீரர்கள் உள்பட 1843 பேர் கண் தானம் குறித்த பத்திரத்தில் கையெழுத்திட்டனர். 315 பேர் ரத்த தானம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X