செமஸ்டர் மார்க் வழங்காமல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

செமஸ்டர் மார்க் வழங்காமல்

Added : நவ 20, 2021
Share
பெங்களூரு : பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர்களுக்கான முதல் இரண்டு செமஸ்டர் மதிப்பெண்கள் வழங்கப்படாமல் இறுதி தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.பெங்களூரு பல்கலைக்கழகத்தில், முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான நான்காவது செமஸ்டர் தேர்வுகள் விரைவில் நடத்தப்பட உள்ளது.தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் குழப்பமான மனநிலையுடனும், இதற்கு

பெங்களூரு : பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர்களுக்கான முதல் இரண்டு செமஸ்டர் மதிப்பெண்கள் வழங்கப்படாமல் இறுதி தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில், முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான நான்காவது செமஸ்டர் தேர்வுகள் விரைவில் நடத்தப்பட உள்ளது.தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் குழப்பமான மனநிலையுடனும், இதற்கு முந்தைய செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காததால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் விளக்கம் கேட்டு வருகின்றனர்.பல்கலைக்கழக நிர்வாக குழுவினர், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வடிவமைப்பதில் மாற்று கருத்து கொண்டிருப்பதால், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு முதல், இரண்டு செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.இது மட்டுமில்லாமல் மூன்றாவது செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.பல்கலைக்கழக துணைவேந்தர் வேணுகோபால் கூறியதாவது:லேமினேசன் வடிவிலான மதிப்பெண் சான்றிதழ் அச்சடிப்பதற்கான டென்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும். இதற்கிடையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் தேவைப்பட்டால், சாதாரண மதிப்பெண் சான்றிதழ் தற்காலிகமாக வழங்கப்படும்.மாணவர்களின் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X