பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஏன்?; முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''எங்கள் அரசு விவசாயிகளுக்கு ஆதரவான அரசு. விவசாயிகளின் வலியுறுத்தலுக்கு பணிந்து, விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கும், ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:விவசாய சட்டங்களை திரும்ப பெற்றதற்கும், ஐந்து


பெங்களூரு : ''எங்கள் அரசு விவசாயிகளுக்கு ஆதரவான அரசு. விவசாயிகளின் வலியுறுத்தலுக்கு பணிந்து, விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

இந்த முடிவுக்கும், ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:விவசாய சட்டங்களை திரும்ப பெற்றதற்கும், ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கும், எந்த தொடர்பும் இல்லை. விவசாயிகளின் போராட்டத்துக்கு இடையில், பஞ்சாப், ஹரியானா உட்பட, சில மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றுஉள்ளது.

எனவே, விவசாய சட்டத்தை, திரும்பப்பெறும் முடிவுக்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை. விவசாய சட்டத்தின் நன்மைகள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. எதிர்வரும் நாட்களில், இதைபற்றி மேலும் ஆலோசனை நடத்தி, விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது, பிரதமரின் விருப்பம். எனவே விவசாய சட்டத்தை திரும்ப பெற்றுள்ளார். இப்புதிய விவசாய சட்டங்களால், விவசாயிகள் தங்களின் விளைச்சல்களை, எங்கு வேண்டுமானாலும் விற்க, வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் விவசாயிகள், தங்களின் விளைச்சலை ஏ.பி.எம்.சி., மூலமாகவே விற்க வாய்ப்பளிக்க வலியுறுத்தி, ஓராண்டாக போராட்டம் நடத்தினர். எனவே சட்டம் திரும்பப்பெறப்பட்டது. உலக வியாபார ஒப்பந்தம் அடிப்படையில், விவசாய மார்க்கெட் சட்டங்களில் திருத்தம் செய்வது குறித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்திலேயே, சட்ட வரைவு வகுத்திருந்தது. மோடி பிரதமரான பின், அனைவருடனும் கலந்தாலோசித்து, சில மாற்றங்களுடன் விவசாய சட்டங்களை அமல்படுத்தினார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X