பொது செய்தி

இந்தியா

பெலந்துார் கால்வாய் தண்ணீர்

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெலந்துார் கால்வாய் தண்ணீர் மாசடைந்து, நுரை படிந்து வருவதற்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பெங்களூரு, கே.ஆர்.,புரம் அருகே பெலந்துார் கால்வாயில் இரண்டு நாட்களாக நுரைபோல படிந்து தண்ணீர் முழுவதும் மாசடைந்து வருவது அப்பகுதி குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தியுள்ளது.இதற்கு பல்வேறு காரணங்களை மக்கள்

பெங்களூரு : பெலந்துார் கால்வாய் தண்ணீர் மாசடைந்து, நுரை படிந்து வருவதற்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெங்களூரு, கே.ஆர்.,புரம் அருகே பெலந்துார் கால்வாயில் இரண்டு நாட்களாக நுரைபோல படிந்து தண்ணீர் முழுவதும் மாசடைந்து வருவது அப்பகுதி குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தியுள்ளது.இதற்கு பல்வேறு காரணங்களை மக்கள் முன்வைக்கின்றனர். பல்வேறு காரணங்கள் இருப்பினும், இதை நிரந்தரமாக தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெலந்துார் கால்வாய் வரும் வழியில் இருக்கும் தொழிற்சாலைகளின் கழிவுகளை இந்த தண்ணீரில் விடுகின்றனர். அவ்வப்போது பலமுறை இந்த நுரை கலந்த நீர் கால்வாயில் வருகிறது. ஆனால், முறையாக அரசு நடவடிக்கை என தெரிகிறது. இப்பகுதியில் காவேரி குடிநீர் வினியோகம் இல்லை. அதனால், போர்வெல் அமைத்துதான் குடிப்பதற்கு நீர் எடுக்கின்றனர். போர்வெல் மூலம் வருவது இந்த கால்வாய் நீர் தான். கால்வாய் நீர் தொடர்ந்து மாசுபடிந்து வருவது அச்சுறுத்தலாக உள்ளது. அரசு அலட்சியமாக இருப்பது மக்களுக்கான நீராதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X