இந்தியா

மூதாட்டியிடம் செயின் பறிப்பு 

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : திலாஸ்பேட்டையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 சவரன் செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி வீமன் நகர், அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி பொன்னி, 63; இவரது உறவினர் மகன் கோரிமேடு காவலர் குடியிருப்பில் தங்கியுள்ளார்.அவரை பார்ப்பதற்காக நேற்று காலை 10:30 மணிக்கு, 'பொன்னி வீட்டில் இருந்து நடந்து

புதுச்சேரி : திலாஸ்பேட்டையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 சவரன் செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வீமன் நகர், அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி பொன்னி, 63; இவரது உறவினர் மகன் கோரிமேடு காவலர் குடியிருப்பில் தங்கியுள்ளார்.அவரை பார்ப்பதற்காக நேற்று காலை 10:30 மணிக்கு, 'பொன்னி வீட்டில் இருந்து நடந்து சென்றுள்ளார். திலாஸ்பேட்டை அப்பா பைத்தியம் சுவாமி கோவில் அருகே, 'சிமெண்ட் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவரை பின் தொடர்ந்து, பைக்கில் வந்த மர்ம நபர், பொன்னி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பித்து சென்றார்.இது குறித்து பொன்னி அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X