இந்தியா

நான்கு நகரங்களுக்கு விமான சேவை; அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து மேலும் நான்கு நகரங்களுக்கு விமானங்களை இயக்க அனுமதி தர வேண்டும் என, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில், அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தினார்.டில்லியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாடு நேற்று நடந்தது.இம்மாநாட்டில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய சிவில்
 நான்கு நகரங்களுக்கு விமான சேவை; அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தல்

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து மேலும் நான்கு நகரங்களுக்கு விமானங்களை இயக்க அனுமதி தர வேண்டும் என, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில், அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தினார்.

டில்லியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாடு நேற்று நடந்தது.இம்மாநாட்டில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து இணை அமைச்சர் சிங், சமூக நீதித்துறை அமைச்சர் ராஜேந்திர குமார் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:புதுச்சேரி விமானத்தினை மீண்டும் முழு வீச்சில் இயங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விமானங்களுக்கு தேவையான எரிபொருள் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விமான எரி பொருளுக்கு வாட் வரி ஏதும் மாநில அரசு விதிக்கவில்லை.

விமான நிலையத்தில் தற்போதுள்ள 1,750 மீட்டர் ஓடுதளத்தை 4 ஆயிரம் மீட்டராக உயர்த்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.இதற்கான தமிழக பகுதி நிலத்தை எடுத்து தர மத்திய விமான போக்குவரத்து உதவ வேண்டும்.புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து தற்போது பெங்களூரு, ைஹதராபாத் நகரங்களுக்கு சிறிய விமானங்கள் இயக்கப்படுகிறது.

புதுச்சேரியில் இருந்து கண்ணுார், ராஜமுந்திரி, விஜயவாடா, கொச்சின் உள்ளிட்ட நான்கு நகரங்களுக்கு விமானத்தை இயக்குவதற்கான வழிதடத்திற்கு உதான் திட்டத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X