இந்தியா

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார்.புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, குடியிருப்புகளை சூழ்ந்தது. பல வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மண்ணாடிப்பட்டு தொகுதி, குமராப்பாளையம்,

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார்.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, குடியிருப்புகளை சூழ்ந்தது. பல வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மண்ணாடிப்பட்டு தொகுதி, குமராப்பாளையம், தேத்தாம்பாக்கம், சுத்துக்கேணி, சந்தை புதுகுப்பம், லிங்கா ரெட்டிபாளையம், காட்டேரிக்குப்பம், ராஜா குளம் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று பார்வையிட்டார். சந்தைப்புது குப்பம், காட்டேரிக்குப்பம் கிராமங்களில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிடடு, விவசாயிகளிடம் உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வதாக தெரிவித்தார். தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்றவும், சேதமடைந்த வீடுகளை சேர்ந்தவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர்கள் முத்தழகன், பாஸ்கர், சீத்தா, ராஜா, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந் தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X