இந்தியா

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கனமழை காரணமாக பெரியக்காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது.பெரியக்காலாப்பட்டு மத்திய சிறைசாலையையொட்டி, சுனாமி குடியிருப்பு உள்ளது. இங்கு 1,400 வீடுகள உள்ளன. சுனாமி குடியிருப்பு வளாகத்தினை அழகுப்படுத்தும் வகையில், ஏராளமான மரங்கள் நடப்பட்டுள்ளன.கனமழையின் காரணமாக, சுனாமி குடியிருப்பு

புதுச்சேரி : கனமழை காரணமாக பெரியக்காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது.

பெரியக்காலாப்பட்டு மத்திய சிறைசாலையையொட்டி, சுனாமி குடியிருப்பு உள்ளது. இங்கு 1,400 வீடுகள உள்ளன. சுனாமி குடியிருப்பு வளாகத்தினை அழகுப்படுத்தும் வகையில், ஏராளமான மரங்கள் நடப்பட்டுள்ளன.கனமழையின் காரணமாக, சுனாமி குடியிருப்பு மெயின்ரோட்டில் உள்ள 60 ஆண்டு கால மஞ்சள் கொன்றை மரம், நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் சாலையின் குறுக்கே விழுந்தது. அதிஷ்டவசமாக அவ்வழியாக யாரும் செல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.

மரம் விழுந்ததால் சுனாமி குடியிருப்பு பிரதான சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தி ஸ்டடி பள்ளி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. மரம் விழுந்ததில் சட்டக்கல்லுாரி மதில் சுவர் சேதமடைந்தது. மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X