இந்தியா

கூட்டுறவு பங்கிற்கு ரூ.2.5 கோடி பாக்கி; எம்.எல்.ஏ.,க்களின் காருக்கு பெட்ரோல் போட மறுப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ரூ. 2.5 கோடி பாக்கியால், எம்.எல்.ஏ., க்களின் காருக்கு பெட்ரோல் போட கூட்டுறவு பங்க் மறுத்துவிட்டது. புதுச்சேரியில் அரசு வாகனங்கள் மற்றும் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு கடன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் நிரப்பப்படும். பின்பு அரசு அதற்கான தொகையை பெட்ரோல் பங்குகளுக்கு அளிக்கும். கூட்டுறவு நிறுவனமான கான்பேர்ட் மற்றும் அமுதசுரபி பெட்ரோல்

புதுச்சேரி : ரூ. 2.5 கோடி பாக்கியால், எம்.எல்.ஏ., க்களின் காருக்கு பெட்ரோல் போட கூட்டுறவு பங்க் மறுத்துவிட்டது.

புதுச்சேரியில் அரசு வாகனங்கள் மற்றும் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு கடன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் நிரப்பப்படும். பின்பு அரசு அதற்கான தொகையை பெட்ரோல் பங்குகளுக்கு அளிக்கும். கூட்டுறவு நிறுவனமான கான்பேர்ட் மற்றும் அமுதசுரபி பெட்ரோல் பங்கிற்கு, அரசு பல கோடி ரூபாய் பாக்கி வைத்ததால், அரியூர் அமுதசுரபி பெட்ரோல் பங்க், கதிர்காமம் கான்பேட் பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

சாரத்தில் உள்ள கட்டட கூட்டுறவு சங்க பெட்ரோல் பங்கிற்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிய வகையில் ரூ. 2.5 கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு எம்.எல்.ஏ., வாகனத்திற்கு ரூ. 10 ஆயிரம் வரை எரிபொருள் நிரப்ப வாய்மொழியாக அமைச்சரவை அலுவலகம் (ஒ.சி.எம்.) தெரிவித்துள்ளது.

ஆனால், சில எம்.எல்.ஏ.க்கள் மாதம் ரூ. 40 ஆயிரத்தை தாண்டி எரிபொருள் நிரப்பியுள்ளனர். மேலும் கூட்டுறவு பெட்ரோல் பங்கிற்கு வைத்துள்ள ரூ. 2.5 கோடி பாக்கி, 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால், எம்.எல்.ஏ., க்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது கடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டது. நேற்று பெட்ரோல் நிரப்ப வந்த 2 எம்.எல்.ஏ.க்களின் காருக்கு பெட்ரோல் போடவில்லை. பின்பு, அமைச்சரவை அலுவலகம் அனுமதி அளித்த பின்பு, பெட்ரோல் நிரப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X