இந்தியா

பிள்ளைச்சாவடி மீனவர்கள் மறியல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : துாண்டில் வளைவு முறையில் கடலில் கருங்கற்கள் கொட்ட வலியுறுத்தி இ.சி.ஆரில் பிள்ளைச்சாவடி மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.பெரியக்காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பு காரணமான தென்னை மரங்கள் சாய்ந்து, சிமெண்ட் சாலை சேதமடைந்தது. இதில், ஆவேசமடைந்த மீனவர்கள், வலை கட்டுமரங்களுடன் நேற்று காலை 7 மணியளவில் இ.சி.ஆரில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து

புதுச்சேரி : துாண்டில் வளைவு முறையில் கடலில் கருங்கற்கள் கொட்ட வலியுறுத்தி இ.சி.ஆரில் பிள்ளைச்சாவடி மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெரியக்காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பு காரணமான தென்னை மரங்கள் சாய்ந்து, சிமெண்ட் சாலை சேதமடைந்தது. இதில், ஆவேசமடைந்த மீனவர்கள், வலை கட்டுமரங்களுடன் நேற்று காலை 7 மணியளவில் இ.சி.ஆரில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் மீனவர்களிடம் பேசி சமாதானம் செய்து, மறியலை கைவிட செய்தனர்.இதனால் இ.சி.ஆரில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், தாசில்தார் ராஜேஷ் கண்ணா ஆகியோர் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பிள்ளைச்சாவடி கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தனர்.அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று துாண்டில் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்து, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X