பொது செய்தி

இந்தியா

உ.பி.,யில் ரூ.3,425 கோடி திட்டம்: பிரதமர் தொடங்கி வைத்தார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஜான்சி: உ.பி.,யில் ரூ.3,425 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.உ.பி.,யில் பண்டல்கண்ட் பிராந்தியத்தில் விவசாயிகளின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், மக்களின் பொருளாதாரம் மேம்படவும், 3,425 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்தார். ஜான்சி நகரில் சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி

ஜான்சி: உ.பி.,யில் ரூ.3,425 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.

உ.பி.,யில் பண்டல்கண்ட் பிராந்தியத்தில் விவசாயிகளின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், மக்களின் பொருளாதாரம் மேம்படவும், 3,425 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்தார். ஜான்சி நகரில் சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி லட்சுமி பாயின் பிறந்தநாள் விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, 600 மெகாவாட் சூரிய சக்தி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்.

3,013 கோடி மதிப்பில் உருவாகும் இந்த பூங்கா, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கும்.இத்துடன், ராணுவ தொழில் வழித் தடத்தின் ஜான்சி பிரிவுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். இங்கு, 400 கோடி மதிப்பில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை செலுத்தும் சாதனங்கள் தயாரிக்கும் தொழிற் பிரிவு அமைய உள்ளது.ஜான்சியில், 12 கோடி மதிப்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில், அவரது சிலை மற்றும் நுாலகத்துடன் அமைந்த பூங்காவை மோடி திறந்து வைத்தார்.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இலகு ரக போர் விமானத்தை விமானப் படை தலைமை தளபதியிடம் மோடி ஒப்படைத்தார்.இந்திய 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தயாரித்த 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் ராணுவ தலைமை தளபதியிடம் வழங்கப்பட்டன. கடற்படை தலைமை தளபதியிடம் நவீன மின்னணு போர் உடைகளை மோடி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X