இந்தியா

எச்சரிக்காத பேரிடர் மேலாண்மை துறை 

Added : நவ 20, 2021
Share
Advertisement
வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து விழுப்புரம் மாவட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் வீடூர் அணை முழு கொள்ளளவை கடந்த 7ம் தேதி எட்டியது. அன்று அணையில் இருந்து 529 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால் புதுச்சேரி மாநில சங்கராபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்தது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம். கரையோரம் உள்ள

வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து விழுப்புரம் மாவட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் வீடூர் அணை முழு கொள்ளளவை கடந்த 7ம் தேதி எட்டியது. அன்று அணையில் இருந்து 529 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் புதுச்சேரி மாநில சங்கராபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்தது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம். கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என தெரிவித்தனர்.ஆனால், அதன்பிறகு, கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்தது. இதனால் வீடூர் அணைக்கு வரும் மொத்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

நேற்று முன்தினம் வீடூர் அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.ஆனால், 529 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட போது எச்சரித்த புதுச்சேரி வருவாய் பேரிடர் துறை, அளவுக்கு அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டபோது பொதுமக்களை எச்சரிக்கவில்லை.இதனால் கரையோரம் உள்ள ஏராளமான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மக்கள் அவசர அவசரமாக அரசு பள்ளி கூடம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் தஞ்சமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X