இந்தியா

சட்டமுறை வாரிசு சான்றிதழ் யாருக்கு? கலெக்டர் பூர்வா கார்க் விளக்கம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சட்டமுறை வாரிசுதாரர் சான்றிதழ் நேரடி வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என, மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வருவாய் அதிகாரிகளால் சட்டமுறை வாரிசுதாரர் சான்றிதழ்களை (Legal Heir Certificate) வழங்கும் முறையை உருவாக்க சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்தது.அதன் அடிப்படையில், புதுச்சேரி

புதுச்சேரி : சட்டமுறை வாரிசுதாரர் சான்றிதழ் நேரடி வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என, மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வருவாய் அதிகாரிகளால் சட்டமுறை வாரிசுதாரர் சான்றிதழ்களை (Legal Heir Certificate) வழங்கும் முறையை உருவாக்க சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்தது.அதன் அடிப்படையில், புதுச்சேரி அரசு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களின் தாசில்தார்கள் மற்றும் மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள துணை தாலுகா அலுவலகங்களின் துணை தாசில்தார்கள் ஆகியோருக்கு அதிகாரம் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தாசில்தார், துணை தாசில்தார்களால் சட்டமுறை வாரிசுதாரர் சான்றிதழ்கள் நேரடி வாரிசுகளுக்கு (வகுப்பு-1) மட்டுமே வழங்கப்படும். அவை வழிமுறை உரிமைச் சான்றிதழுக்கு இணையாகக் கருதப்பட மாட்டாது.தாசில்தார்கள், துணை தாசில்தார்களால் சட்டமுறை வாரிசுதாரர் சான்றிதழ்களை வழங்கும் முறையானது பொது மக்களுக்கு, அச்சான்றிதழ்களைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குகிறது.உரிமையியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சிரமம், தாமதங்கள் போன்றவற்றைத் தவிர்க்கிறது. நீதித்துறையின் சுமையை கணிசமாகக் குறைக்கிறது.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X