இந்தியா

27 பேருக்கு தொற்று; இருவர் பலி

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா பாதித்த இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 27 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,118 பேரிடம் செய்த பரிசோதனையில் 27 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிப்பு எண்ணிக்கை 1,28,588 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்து மருத்துவமனைகளில் 75 பேர், 239 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சையில் உள்ளனர்.முத்தியால்பேட்டையில் 74

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா பாதித்த இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 27 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,118 பேரிடம் செய்த பரிசோதனையில் 27 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிப்பு எண்ணிக்கை 1,28,588 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்து மருத்துவமனைகளில் 75 பேர், 239 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சையில் உள்ளனர்.முத்தியால்பேட்டையில் 74 வயது முதியவர், பாகூரை சேர்ந்த 29 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 1,869 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 37 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,405 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தொற்று சதவீதம் 1.24, இறப்பு சதவீதம் 1.45, குணமடைந்தோர் சதவீதம் 98.30 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 1010 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மாநிலத்தில் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை 7,36,169 பேர் போட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X